ADDED : ஆக 23, 2025 12:32 AM

திருப்பூர்: இந்திய மாணவர் சங்கத்தின், 27வது மாநில மாநாடு, செங்கப்பள்ளியில் இன்று துவங்கி இரண்டு நாட்கள் நடக்கிறது. இதை முன்னிட்டு நேற்று, திருப்பூரில் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம், யூனியன் மில் ரோட்டில் நடந்தது.
மாநில தலைவர் சம்சீர்அகமது தலைமை வகித்தார். அகில இந்திய தலைவர் ஷாஜி, துணை தலைவர் மிருதுளா, மாவட்ட செயலாளர் அரவிந்த்சாமி முன்னிலை வகித்தனர்.
மதுரை எம்.பி. வெங்கடேசன் பேசியதாவது:
இந்தியாவிலேயே, தமிழகம் மட்டுமே தனித்துவமான சிறப்புகளுடன் இருக்கிறது; மாணவர் சங்கம் போராட்டமே முக்கியகாரணம். உலகமே வியக்கும் வகையில், ஹிந்தி திணிப்புக்கு எதிரான மொழி போராட்டம் நடத்தியவர்கள், மாணவர்கள். இன்று அவர்களை பல்வேறு கட்சிகள் சொந்தம் கொண்டாடுகின்றன.
பள்ளி அளவிலேயே, மாணவர் தேர்தல் நடத்தி, ஜனநாயகத்தை பாதுகாக்க தயார்படுத்த வேண்டும்.
அமெரிக்கா, 50 சதவீதம் வரி உயர்த்திய பிறகும், மத்திய அரசு மவுனம் காக்கிறது; கோவை, திருப்பூர், கரூர், ஈரோடு மாவட்ட தொழில்களை பாதுகாக்க, அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.