/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குட்டையில் மூழ்கி பலியான மாணவர் 321 மதிப்பெண்
/
குட்டையில் மூழ்கி பலியான மாணவர் 321 மதிப்பெண்
ADDED : மே 17, 2025 02:39 AM
பல்லடம் : பல்லடம் அருகே, குட்டையில் மூழ்கி உயிரிழந்த மாணவர், பத்தாம் வகுப்பு தேர்வில், 321 மதிப்பெண் பெற்றுள்ளார்.
பல்லடத்தை அடுத்த கோடங்கிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் மகன் மணிகண்டன் 14. காரணம்பேட்டை அரசு உயர்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறார். கடந்த, மே 5ம் தேதி, தனது வளர்ப்பு நாயை காப்பாற்ற முயற்சிக்கையில், பருவாய் அணைத்தோட்ட குட்டையில் மூழ்கி உயிரிழந்தார். இச்சம்பத்துக்கு முன்பாக, மணிகண்டன் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி இருந்தார். தேர்வு முடிவுக்காக காத்திருந்தபோது, இந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. நேற்று வெளியான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில், தேர்ச்சி பெற்ற மணிகண்டன், 321 மதிப்பெண் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.