/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளி செல்ல அடம் பிடித்து அறையை பூட்டிய மாணவன் ; * தீயணைப்பு வீரர்கள் மீட்பு

ADDED : ஜன 07, 2026 07:44 AM
காங்கயம்: காங்கயத்தில் பள்ளிக்கு செல்ல அடம்பிடித்து, வீட்டுக்குள் தாழிட்டு கொண்ட மாணவனை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
காங்கயம், அமராவதி நகரை சேர்ந்தவர் பழனிசாமி, தொழிலாளி. இவரது, 12 வயது மகன், காங்கயம் அரசு பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். அரையாண்டு தேர்வு முடிந்து பள்ளி துவங்கிய நிலையில், பள்ளிக்கு செல்ல மாட்டேன் என, அடம்பிடித்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை, பள்ளிக்கு செல்ல அடம்பிடித்த மாணவன், வீட்டிலுள்ள அறையில், உள்பக்கமாக தாழிட்டு கொண்டார். அச்சமடைந்த பெற்றோர் காங்கயம் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த அவர்கள், சாமர்த்தியமாக பேசி, அறையை திறக்க சொல்லி மாணவனை பத்திரமாக மீட்டனர். அதன்பின், மாணவனுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.