/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நடுரோட்டில் நின்ற 'டஞ்சன்' பஸ்; மாணவர் - தொழிலாளர் அவதி
/
நடுரோட்டில் நின்ற 'டஞ்சன்' பஸ்; மாணவர் - தொழிலாளர் அவதி
நடுரோட்டில் நின்ற 'டஞ்சன்' பஸ்; மாணவர் - தொழிலாளர் அவதி
நடுரோட்டில் நின்ற 'டஞ்சன்' பஸ்; மாணவர் - தொழிலாளர் அவதி
ADDED : ஜூலை 15, 2025 10:39 PM

பல்லடம்; பல்லடம் அருகே, பழுதாகி நின்ற அரசு பஸ்ஸில் இருந்த பயணிகள், நடு ரோட்டில் இறக்கி விடப்பட்ட நிலையில், மாற்று பஸ் கிடைக்காமல் கடும் அவதிக்குள்ளாகினர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் இருந்து திருப்பூர் செல்லும் அரசு டவுன் (வழித்தட எண்: 30), நேற்று காலை, வழக்கம்போல் பல்லடத்தில் இருந்து புறப்பட்டது. ஆறுமுத்தாம்பாளையம் நால்ரோடு பகுதியில், இன்ஜின் கோளாறு காரணமாக பழுதாகி நடுரோட்டில் நின்றது. பயணிகள் அங்கேயே இறக்கி விடப்பட்ட நிலையில், மாற்று பஸ் கிடைக்காமல் கடும் அவதிக்குள்ளாகினர். பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பனியன் கம்பெனி தொழிலாளர்கள், அவ்வழியே வந்தவர்களிடம் லிப்ட் கேட்டு சென்றனர்.
பழுதான பஸ்சில் பயணித்த சிலர் கூறுகையில், 'பழைய பஸ்ஸான இதுவும் மிகவும் மோசமான கண்டிஷனில் உள்ளது. திருப்பூர் புறப்பட்ட டவுன் பஸ், திக்கி திணறியபடி ஆறுமுத்தாம்பாளையம் வந்தது.
சேடபாளையத்தில் இருந்தே, பஸ், இன்ச் இன்ச்சாகத்தான் நகர்ந்தது. அதன்பின், இன்ஜினில் இருந்து புகை வந்து, நடுரோட்டிலேயே நின்றது. இதனால், எங்களை இறக்கி விட்டனர்.
இப்பகுதியில் வேறு பஸ் இல்லாத நிலையில், பல்லடம் கிளையில் இருந்து மாற்று பஸ்ஸூம் அனுப்பப்படவில்லை. இதனால், ஆட்டோவிலும், சிலர் லிப்ட் கேட்டும் சென்றனர். இது பரபரப்பான காலை நேரத்தில், எங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது,' என்றனர்.