/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கல்விக்கடன் வழங்க சிறப்பு முகாம்; மாணவர்கள் பங்கேற்க அறிவுறுத்தல்
/
கல்விக்கடன் வழங்க சிறப்பு முகாம்; மாணவர்கள் பங்கேற்க அறிவுறுத்தல்
கல்விக்கடன் வழங்க சிறப்பு முகாம்; மாணவர்கள் பங்கேற்க அறிவுறுத்தல்
கல்விக்கடன் வழங்க சிறப்பு முகாம்; மாணவர்கள் பங்கேற்க அறிவுறுத்தல்
ADDED : நவ 21, 2025 06:16 AM
உடுமலை: மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கும் சிறப்பு முகாம் வரும், 26ம் தேதி நடக்கிறது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள மாணவ, மாணவியர் கல்விக்கடனுக்காக விண்ணப்பிக்க, சிறப்பு கல்விக்கடன் முகாம், வரும் 26ம் தேதி, காலை, 10:00 மணி முதல் மதியம், 2:00 மணி வரை, திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக, தரை தளம் அறை எண், 20ல் நடக்கிறது.
மாவட்டத்தின் முன்னோடி வங்கியான கனரா வங்கி மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து வங்கிகள் பங்கேற்க உள்ளன.
கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள் www.pmvidyalaxmi.co.in என்ற இணையதளத்தில், தங்களுடைய விண்ணப்பத்தை தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து, முகாம் நடைபெறும் நாளன்று, விண்ணப்பத்தின் நகல் மற்றும் ஆவணங்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.
விண்ணப்ப நகல், மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோரின் இரண்டு புதிய போட்டோ, வங்கி கணக்கு, புத்தக நகல், ஆண்டு வருமானச்சான்று நகல், சாதிச்சான்று நகல், பான் கார்டு நகல், ஆதார் அட்டை நகல், கல்விக்கட்டண விபரம் ஆகியவற்றுடன் பங்கேற்க வேண்டும்.
மேலும், 10ம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் இளநிலை பட்டப் படிப்பின் மதிப்பெண் சான்றிதழ்கள், முதல் பட்டதாரியாக இருப்பின் அதற்கான சான்று மற்றும் கலந்தாய்வு வாயிலாக பெறப்பட்ட கல்லுாரி சேர்க்கைக்கான ஆணை போன்ற ஆவணங்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.
திருப்பூர் மாவட்டத்தைச்சேர்ந்த மாணவ, மாணவியர், இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறும், மேலும் விபரங்களுக்கு, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் 0421- -2971185 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

