/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளியில் 'மகிழ் முற்றம்' மாணவர்கள் ஆர்வம்
/
பள்ளியில் 'மகிழ் முற்றம்' மாணவர்கள் ஆர்வம்
ADDED : ஜூலை 12, 2025 12:51 AM

திருப்பூர்; திருப்பூர், ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி துவக்கப்பள்ளியில், 'மகிழ் முற்றம்' என்ற பெயரில் மாணவர் அமைப்பு துவங்கப்பட்டது.
மாணவர்கள் மத்தியில் தலைமைப்பண்பை வளர்க்கவும், குழுவாக இணைந்து செயல்படுவதை ஊக்குவிக்கவும், வேற்றுமையில் ஒற்றுமை காணும் மனப்பான்மையை வளர்க்கவும், முழுமை வாய்ந்த வளர்ச்சியை ஆதரிக்கும் நோக்கில், பள்ளிகளில் 'மகிழ் முற்றம்' என்ற பெயரில் மாணவர் அமைப்பு துவங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி, பள்ளியில் படிக்கும் மாணவர்களை, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை என, 5 குழுக்களாக பிரிந்து, ஒவ்வொரு அணிக்கும் மாணவர் தலைவர் மற்றும் மாணவி தலைவி என, 10 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களது பதவியேற்பு மற்றும் உறுதிமொழி ஏற்றுக் கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது.
''ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் அணிக்கு பாராட்டு, பரிசு வழங்கி ஊக்குவிக்கப்படும்'' என, பள்ளி தலைமையாசிரியர் (பொறுப்பு) மோகன் கூறினார். வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் கோமதி, பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்,