/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுற்றுச்சூழலை காக்கும் வன உயிரினங்கள் மாணவர்கள் விழிப்புணர்வு
/
சுற்றுச்சூழலை காக்கும் வன உயிரினங்கள் மாணவர்கள் விழிப்புணர்வு
சுற்றுச்சூழலை காக்கும் வன உயிரினங்கள் மாணவர்கள் விழிப்புணர்வு
சுற்றுச்சூழலை காக்கும் வன உயிரினங்கள் மாணவர்கள் விழிப்புணர்வு
ADDED : செப் 06, 2025 06:45 AM

திருப்பூர்; திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி, என்.எஸ்.எஸ்., அலகு - 2 சார்பில், தேசிய வன உயிரின தினத்தை முன்னிட்டு, திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு - 2, ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார, முன்னிலை வகித்தார். தெற்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஆனந்தன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசுகையில், ''சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் வன உயிரினங்களின் பங்கு, மிக முக்கியம். மனிதன் தோன்றுவதற்கு முன்பே, விலங்கு, பறவையினங்கள் தோன்றிவிட்டன. வன உயிரினங்கள் தான், விதைப்பரவலை ஏற்படுத்தி, வனங்களை உருவாக்குகின்றன. வன உயிரினங்கள் இல்லாமல் மனிதர்களால் வாழ முடியாது; அவற்றை பாதுகாப்பது நம் கடமை' என்றார்.
போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஜெயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, மாணவ, மாணவியர் உறுதிமொழியேற்றனர். சிங்கம், புலி உருவம் கொண்ட முக மூடி அணிந்து மாணவ, மாணவியர், நடனமாடியும், பிரமிடு அமைத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.