/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாவட்ட விளையாட்டு போட்டிகளில் மாணவியர் அபாரம்!
/
மாவட்ட விளையாட்டு போட்டிகளில் மாணவியர் அபாரம்!
ADDED : நவ 28, 2024 06:12 AM

திருப்பூர்; திருப்பூர் மாவட்ட கல்வித்துறை சார்பில், வருவாய் மாவட்ட விளையாட்டு போட்டிகள், காங்கயம் ரோட்டிலுள்ள வித்ய விகாசினி பள்ளியில் துவங்கி, நடந்து வருகிறது.
நேற்று ஒற்றையர் பிரிவு, கேரம் போட்டியில், 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில், அவிநாசி மண்டலத்தை சேர்ந்த, பெரியாயிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி, கவுசிகா முதலிடம் பெற்றார்.
திருப்பூர் தெற்கு மண்டலம், பழனியம்மாள் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி அப்ரின் பாத்திமா, இரண்டாமிடம் பெற்றார். இரட்டையர் பிரிவில், திருப்பூர் தெற்கு மண்டலம், வீரபாண்டி அரசுப்பள்ளி மாணவிகள் பிருந்தா, தங்கமணி ஜோடி முதலிடம்; உடுமலை மண்டலம், குமாரபாளையம் பெண்கள் பள்ளி மாணவிகள் தேவதர்ஷினி, விஜயதர்ஷினி ஜோடி இரண்டாமிடம் பெற்றனர்.
n 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில், திருப்பூர் தெற்கு மண்டலம், வீரபாண்டி அரசுப்பள்ளி மாணவி ஹரிணி பிரியா முதலிடம், தாராபுரம் மண்டலம், அலங்கியம் அரசுப்பள்ளி மாணவி பிருந்தா இரண்டாமிடம் பெற்றார். இரட்டையர் பிரிவில், உடுமலை மண்டலம், ஜி.கே.என்., அரசுப்பள்ளி மாணவிகள் நிவேதா, இலக்கியா ஜோடி முதலிடம்; காங்கயம் மண்டலம், கார்மல் பள்ளி மாணவிகள் கனிகா, திவ்யதர்ஷினி ஆகியோர் இரண்டாமிடம் பெற்றனர்.
n 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில், உடுமலை மண்டலம், ஜி.கே.என்., பள்ளி மாணவி சுஷ்மிதா முதலிடம்; காங்கயம் மண்டலம், ஜேசிஸ் மெட்ரிக்பள்ளி மாணவி விஷ்ணு ஹரிணி இரண்டாமிடம் பெற்றார். இரட்டையர் பிரிவில், லிட்டில் பிளவர் பள்ளி மாணவிகள் அக்ஷயா, அபினயா ஜோடி முதலிடம்; அவிநாசி மண்டலம், ஊத்துக்குளி பெண்கள் பள்ளி மாணவிகள் கேத்ரின், நஸ்ரின் ஜோடி இரண்டாமிடம் பெற்றனர்.
'பீச்' வாலிபால்
ஜூனியர் பிரிவில், வித்யவிகாசினி பள்ளி முதலிடம்; திருமுருகன் மெட்ரிக் பள்ளி அணி இரண்டமிடம் பெற்றது. சீனியர் பெண்கள் பிரிவில், வித்யா விகாசினி பள்ளி அணி முதலிடம்; பூமலுார் அரசுப் பள்ளி அணி இரண்டாமிடம் பெற்றது. சூப்பர் சீனியர் பிரிவில், வித்யா விகாசினி பள்ளி அணி முதலிடம்; உடுமலை, எஸ்.வி.என்., பள்ளி அணி இரண்டாமிடம் பெற்றது.
டென்னிகாய்ட்
பதிநான்கு வயதுக்குட்பட்டோர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில், காங்கயம் மண்டலம், ஜேசீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணி முதலிடம்; திருப்பூர் தெற்கு மண்டலம், பிரன்ட்லைன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணி இரண்டாமிடம் பெற்றது.
n 17 வயதுக்குட்பட்டோர் ஒற்றையர் பிரிவில், அவிநாசி மண்டலம், எம்.எஸ். வித்யாலயா பள்ளி முதலிடம்; காங்கயம் மண்டலம், ஜேசீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடம் பெற்றது. இரட்டையர் பிரிவில், ஜேசீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதலிடம்; எம்.எஸ்., வித்யாலயா பள்ளி இரண்டாமிடம் பெற்றது.
n 19 வயதுக்குட்பட்டோர் ஒற்றையர் பிரிவில், திருப்பூர் தெற்கு மண்டலம், வித்யா விகாசினி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதலிடம்; காங்கயம் மண்டலம், பாலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடம் பெற்றது. இரட்டையர் பிரிவில் வித்யா விகாசினி பள்ளி முதலிடம், தாராபுரம் மண்டலம், புனித அலோசியஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடம் பெற்றது.