/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குறுமைய சதுரங்க போட்டி; மாணவ, மாணவியர் அசத்தல்
/
குறுமைய சதுரங்க போட்டி; மாணவ, மாணவியர் அசத்தல்
ADDED : ஜூலை 15, 2025 10:40 PM

திருப்பூர்; திருப்பூர் வடக்கு குறுமைய அளவிலான மாணவ, மாணவியருக்கான செஸ் போட்டி, பிஷப் உபகாரசாமி பள்ளியில் நடந்தது.
பள்ளி தாளாளர் மரிய ஆண்டனி, தலைமையாசிரியர் பீட்டர் மரியதாஸ், வாவிபாளையம் பள்ளி தலைமையாசிரியர் போட்டிகளை துவக்கி வைத்தனர். போட்டியில், 504 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் ஜெரால்ட், பாலகிருஷ்ணன், இணை செயலர் இளங்கோவன் ஆகியோர் போட்டிகளை ஒருங்கிணைத்தனர்.
இதில், 11 வயதுக்குட்பட்ட மாணவர் பிரிவில் தேவதருண் (விகாஸ் என் அண்டு பி கிளப்), ராஹேஷ் ரோஷன் (இன்பென்ட் ஜீசஸ் பள்ளி), புஷ்பேந்தர் சிங் (ஸ்ரீசாய் பள்ளி). மாணவியர் பிரிவில் யாழினி (ஏ.பி.எஸ்., அகாடமி), பாரதி, ரியா (ஸ்ரீ சாய் பள்ளி). 14 வயதுக்குட்பட்ட மாணவர் பிரிவில் பிரணவர்ஷன் (மெஜஸ்டிக்), சஷ்விக், சஷ்வின் (விகாஸ் ஜூனியர்ஸ்), மாணவியர் பிரிவில் ராஜேஸ்வரி (விகாஸ் ஜூனியர்ஸ்), சஸ்டிகா (ஏ.வி.பி., டிரஸ்ட்), சவுமியா ஸ்ரீ (கொங்கு வேளாளர் பள்ளி).
பதினேழு வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் லிபிநாதன் (ஏ.வி.பி., டிரஸ்ட் பள்ளி), வருண்குமார் (சின்னசாமியம்மாள் பள்ளி), கோகுல் (ஜெய்சாரதா பள்ளி), பெண்கள் பிரிவில் டிரினிடா மெர்சி (இன்பென்ட் ஜீசஸ்), அபிநயா (ஜெய்வாபாய் பள்ளி), ஆதிபிரகதா (ஸ்ரீ சாய் பள்ளி). 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில், மாதவன், ஹரி விக்னேஷ் (பிஷப் பள்ளி), நந்து (ஜெய்சாரதா பள்ளி), பெண்கள் பிரிவில் ஆதிசம்ரிதா, (ஸ்ரீ சாய்), அக்ஷயாதர்ஷினி (வி.கே., பெண்கள் பள்ளி), அஷ்மிதா (ஜெய்வாபாய் பள்ளி) ஆகியோர் வெற்றி பெற்றனர்.