/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாணவியரின் திருக்குறள் வாசிப்பு ஆர்வம்
/
மாணவியரின் திருக்குறள் வாசிப்பு ஆர்வம்
ADDED : செப் 27, 2025 12:17 AM

திருப்பூர்; கடந்த, 8ம் தேதி சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு, திருப்பூர் குமரன் மகளிர் கல்லுாரி நிர்வாகத்தினர், திருக்குறள் வாசித்தலில் சாதனை படைக்கும் முயற்சி மேற்கொண்டனர்.
அதன்படி, கல்லுாரியில் பயிலும், 2,300 மாணவிகள் மற்றும், 150 பேராசிரியர்கள் பங்கேற்று, திருக்குறள் புத்தகத்தில், கல்வி அதிகாரத்தை வாசித்தனர். இதை சாதனை புத்தகத்தில் பதிவு செய்யும் முயற்சியை கல்லுாரி நிர்வாகத்தினர் மேற்கொண்டனர்.அதன்படி, 'இன்டர்நேஷனல் ப்ரைடு புக் ஆப் வேர்ல் ரெக்கார்டு' என்ற நிறுவனம், இந்த முயற்சியை சர்வதேச அளவிலான சாதனையாக அங்கீகரித்து, சான்றிதழ் வழங்கியுள்ளது. இதுதொடர்பான நிகழ்ச்சி, கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது.
கல்லுாரி முதல்வர் வசந்தி, வரவேற்று துவக்கி வைத்தார். திருப்பூர் கூட்டுறவு வீட்டு வசதி சங்க சார் பதிவாளர் கார்த்திகை செல்வி, பேசினார்.'இன்டர்நேஷனல் ப்ரைடு புக் ஆப் வேர்ல் ரெக்கார்டு' அமைப்பின் நிறுவனர் பிரதீப், சாதனைக்கான சான்றிதழ் வழங்கி பேசினார்.
அதன் கவுரவ ஆலோசகர் கதிரேசன், கல்லுாரி நிர்வாக அலுவலர் நிர்மல்ராஜ், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவியர் பங்கேற்றனர். கல்லுாரி பேரவை பொறுப்பாளர் சுதாதேவி, நன்றி கூறினார்.