ADDED : ஜூலை 05, 2026 08:00 AM

திருப்பூர்: திருப்பூர் நொய்யல் வீதி மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் சதுரங்கப் போட்டி நடைபெற்றது.
தலைமை ஆசிரியர் (பொறுப்பு) பஷீர் அகமது தலைமை வகித்தார். பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். முனைவர் தங்கராஜன், தொழிலதிபர் ஹரிஹரன் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். போட்டி விதிமுறைகளை பிடே ஆர்பிட்டர் கோபி கிருஷ்ணன் விளக்கினார். இதில், 94 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
மாணவியர் 14 வயது பிரிவில், நாபியா, லித்திகா ஸ்ரீ, ஹனீஷா. 17 வயது பிரிவில், ஹீரா மரியம், ஹப்சானா, ரீமா.
மாணவர், 14 வயது பிரிவில், பாசில் அகமது, இர்பான் அகமது, ஷெர்ஷா கான். 17 வயது பிரிவில், ஷாகித் அப்ரிடி, சையது ஷேக் அப்துல்லா, ஷேக் சல்மான் ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களைப் பெற்றனர்.
இவர்களுக்கு கிராண்ட் மாஸ்டர்கள் விஸ்வநாதன் ஆனந்த், பிரக்ஞானந்தா, குகேஷ் ஆகியோரின் அறிவுரைகள் இடம்பெற்ற படங்கள் வழங்கப்பட்டன.
