/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளியில் மாணவன் மர்ம மரணம்; இறப்பில் சந்தேகம் என்கின்றனர் பெற்றோர்
/
பள்ளியில் மாணவன் மர்ம மரணம்; இறப்பில் சந்தேகம் என்கின்றனர் பெற்றோர்
பள்ளியில் மாணவன் மர்ம மரணம்; இறப்பில் சந்தேகம் என்கின்றனர் பெற்றோர்
பள்ளியில் மாணவன் மர்ம மரணம்; இறப்பில் சந்தேகம் என்கின்றனர் பெற்றோர்
ADDED : பிப் 18, 2026 07:32 AM

திருப்பூர்: திருப்பூர் அருகே ஏழாம் வகுப்பு மாணவன் இறந்த விவகாரத்தில், சந்தேகம் இருப்பதாக பெற்றோர் கூறியுள்ள நிலையில், போலீசார் விசாரிக்கின்றனர்.
திருப்பூர், கணக்கம்பாளையம், பாலாஜி நகரை சேர்ந்தவர் முரளி - மணிமேகலை தம்பதியின் மகன் தீபக், 12. அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில், ஏழாம் வகுப்பு படித்தான். நேற்று மதியம், 1.30 மணிக்கு மணிமேகலைக்கு, தலைமையாசிரியர் போன் செய்து, 'உங்கள் மகன் மயக்கமடைந்து விழுந்து விட்டான். அவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளோம்' என தகவல் கொடுத்தார்.
அதிர்ச்சியடைந்த பெற்றோர், திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு, மகன் இறந்தது தெரிந்து அழுது புரண்டனர்.
பெருமாநல்லுார் போலீசார் கூறியதாவது:
மதியம் சாப்பிட்டு விட்டு, தண்ணீர் குடிக்கும் போது மயங்கி கீழே விழுந்துள்ளான். இறப்புக்கான காரணம் தெரியவில்லை.
பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ப ள்ளியில் உள்ள 'சிசிடிவி' பதிவுகளை பார்த்து வருகிறோம். கடந்த, 13ம் தேதி பள்ளிக்கு வந்த மாணவனுக்கு உடல் நலம் சரியில்லை என்று பெற்றோர் அழைத்து சென்றுள்ளனர். அதன் பின் நேற்று தான் பள்ளிக்கு வந்திருக்கிறான். ஆசிரியர்கள், மாணவர்களிடம் விசாரணை நடக்கிறது.
இவ்வாறு கூறினர்.
இறந்த தீபக்கின், பெற்றோர் கூறியதாவது:
பள்ளிக்கு சந்தோஷமாக கிளம்பி சென்ற எங்கள் மகன் இறந்து விட்டார். அவரது கன்னத்தை பார்க்கும் போது, வீங்கி உள்ளது. வாயில் நுரையும், மூக்கில் இருந்து வெளியேறிய ரத்தத்தை துடைத்ததற்கான அடையாளமும் தெரிகிறது. மகனை அடித்து கொன்றதாக சந்தேகப்படுகிறோம்.
இவ்வாறு கண்ணீர் மல்க அவர்கள் கூறினர்.

