/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநில அளவிலான களரிப்போட்டி மாணவர்கள் பங்கேற்று அசத்தல்
/
மாநில அளவிலான களரிப்போட்டி மாணவர்கள் பங்கேற்று அசத்தல்
மாநில அளவிலான களரிப்போட்டி மாணவர்கள் பங்கேற்று அசத்தல்
மாநில அளவிலான களரிப்போட்டி மாணவர்கள் பங்கேற்று அசத்தல்
ADDED : ஏப் 28, 2025 10:48 PM

உடுமலை; மடத்துக்குளத்தில், களரி பயட்டு பெடரேஷன் ஆப் தமிழ்நாடு சார்பில், மாநில அளவிலான களரிப்போட்டி நடந்தது.
மடத்துக்குளம் - கணியூர் ரோட்டிலுள்ள அக்சரா அரங்கில், மடத்துக்குளம் களரி பயட்டு பெடரேஷன் ஆப் தமிழ்நாடு சார்பில், மாநில அளவிலான களரி சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தது. தமிழ்நாடு களரிப்பயட்டு ஆசோசியேஷன் செயலாளர் வீரமணி வரவேற்றார்.
ஆர்.சி. ஆலயத்தின் பங்குத்தந்தை ஆண்டனி லாரன்ஸ், நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். களரி பயட்டு இணை அமைப்பின் இணைச்செயலாளர் கண்ணுார் ஜெயன் தலைமை வகித்தார்.
அக்சரா வித்யா மந்திர் பள்ளி தலைவர் முருகேசன், சோழமாதேவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் கனகராஜ் முன்னிலை வகித்தனர். உடுமலை டி.எஸ்.பி., நமச்சிவாயம் போட்டிகளை துவக்கி வைத்தார்.
மாநிலம் முழுவதும் இருந்து பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நுாற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர். போட்டி சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர் பிரிவுகளில் உயரமாக உதைத்தல், கேட்டுக்கரி, வாளும் கேடயமும், உருமி வீசல், கைப்போர் உள்ளிட்டவை நடந்தன.
முதல் மூன்று இடத்தில் வெற்றி பெற்ற மாணவர்கள், மே இறுதி நாளில் கேரளாவில் நடக்க உள்ள, தேசிய அளவிலான களரிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி பரிசுகளை வழங்கினார். பரிசளிப்பு விழாவில், தமிழ்நாடு களரிப்பயட்டு அசோசியேஷன் தலைவர் தேவராஜ், விவேகானந்தா வித்யாலயா பள்ளி தாளாளர் மூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.