தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சுதந்திர தின கலைநிகழ்ச்சிகள்: தயாராகும் மாணவ, மாணவியர் 

சுதந்திர தின கலைநிகழ்ச்சிகள்: தயாராகும் மாணவ, மாணவியர் 

சுதந்திர தின கலைநிகழ்ச்சிகள்: தயாராகும் மாணவ, மாணவியர் 


UPDATED : ஆக 08, 2026 10:37 PM

ADDED : ஆக 08, 2026 10:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 08, 2026 10:37 PM ADDED : ஆக 08, 2026 10:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:எண்பதா-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, திருப்பூரில் நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான விழாவுக்கான ஏற்பாடுகளை கல்வித்துறை தீவிரப்படுத்தியுள்ளது. மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளுக்கான தேர்வு மற்றும் ஒத்திகைப் பணிகள் தொடங்கியுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் திருப்பூர், சிக்கண்ணா அரசு கல்லுாரி மைதானத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை சார்பில் சுதந்திர தின விழா நடைபெறுகிறது. விழாவில் கலெக்டர் தேசியக் கொடியேற்றி வைத்து, அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்குவதுடன், சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வாரிசுகளை கவுரவிக்கிறார். சிறப்பாகப் பணியாற்றிய போலீசார் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. முக்கிய அம்சமாக பள்ளி மாணவ, மாணவியரின் தேசபக்தியை வெளிப்படுத்தும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதற்காக ஆர்வமுள்ள பள்ளிகளில் இருந்து மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

வரும் 11-ம் தேதிக்குள் பள்ளிகள் கலைநிகழ்ச்சி குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 12-ம் தேதி* மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிகளுக்குச் சென்று கலைநிகழ்ச்சிகளை ஆய்வு செய்து இறுதித் தேர்வு மேற்கொள்கின்றனர்.

அதைத் தொடர்ந்து 13-ம் தேதி போலீசார், பேண்ட் வாத்தியக்குழு, ஊர்க்காவல் படை, என்.சி.சி. மாணவர்கள் ஆகியோருடன் இணைந்து, மாவட்ட சுதந்திர தின விழாவுக்கான இறுதி ஒத்திகையில் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்க உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us