/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேர்வுக்கு தயார்படுத்தப்படும் மாணவர்கள் :அரசு பள்ளிகளில் மாலை நேர வகுப்புகள்
/
தேர்வுக்கு தயார்படுத்தப்படும் மாணவர்கள் :அரசு பள்ளிகளில் மாலை நேர வகுப்புகள்
தேர்வுக்கு தயார்படுத்தப்படும் மாணவர்கள் :அரசு பள்ளிகளில் மாலை நேர வகுப்புகள்
தேர்வுக்கு தயார்படுத்தப்படும் மாணவர்கள் :அரசு பள்ளிகளில் மாலை நேர வகுப்புகள்
ADDED : பிப் 04, 2024 08:35 PM
உடுமலை:பொதுத்தேர்வு நெருங்கி வருவதால், உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2, பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் மாதம் நடக்கிறது. வரும் 12ம் தேதி செய்முறைத்தேர்வு துவங்க உள்ளது. பொதுத்தேர்வுக்கு இன்னமும் ஒரு மாதம் மட்டுமே இருப்பதால், மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளில், பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகளை துவக்க, மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே, உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி அரசுப்பள்ளிகளில், பாடங்கள் அனைத்தும் முடிக்கப்பட்டு திருப்புதல் தேர்வுகள் நடந்து வருகிறது.
தற்போது, பள்ளி வேலை நேரம் முடிந்த பின், மாலை, 4:30 முதல், 6:30 மணி வரை, ஒவ்வொரு நாளும் ஒரு பாடம் என்ற அடிப்படையில், சிறப்பு வகுப்பு நடத்தப்படுகிறது. தேர்வுகள் துவங்கும் வரை, இந்த வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படவும் உளளது.
கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கும் நோக்கில் சிறப்பு வகுப்பு துவங்கப்பட்டுள்ளது. கல்வியில் பின்தங்கிய மாணவ, மாணவியர் மீது, ஒவ்வொரு பாடத்திலும் கூடுதல் கவனம் செலுத்த, வகுப்பாசிரியர் மற்றும் தலைமையாசியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சில பள்ளிகளில், மாலை நேரம் மாணவர்களுக்கு தேவையான சிற்றுண்டி, முன்னாள் மாணவர்கள் வாயிலாக வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாணவர் சிறப்பு வகுப்பு குறித்து பெற்றோர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டு வருகிறது. அதேநேரம், மாணவர்கள் சரியான நேரத்துக்கு வீடு சென்று விட்டார்களா, படிப்பில் தினசரி கவனம் செலுத்துகிறார்களா என்பதை வாட்ஸ்ஆப் குழு வாயிலாகவும் கண்காணிக்க, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

