தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'மாணவர்கள் தமிழை நேசிக்க வேண்டும்'

 'மாணவர்கள் தமிழை நேசிக்க வேண்டும்'

 'மாணவர்கள் தமிழை நேசிக்க வேண்டும்'


ADDED : ஜன 25, 2026 06:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 25, 2026 06:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பல்லடம்: 'மாணவர்கள் தமிழை நேசிக்க வேண்டும்,' என, பல்லடம் அரசு கல்லுாரியில் நடந்த கருத்தரங்கில், மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

பல்லடம் அரசு கல்லுாரியில், திருக்குறள் வார விழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, நடந்த திருக்குறள் கருத்தரங்குக்கு, கல்லுாரி முதல்வர் மணிமேகலை தலைமை வகித்தார். தமிழ்த்துறை தலைவர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். முன்னாள் பேராசிரியர் ரேணுகாதேவி, திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை வல்லுநர் முருகேச பாண்டியன் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் மாரிமுத்து முன்னிலை வகித்தனர்.

'வள்ளுவத்தில் நுால்' என்ற தலைப்பில் சொற்பொழிவாளர் திருக்குறள் பொன்னுசாமி பேசியதாவது:

எதிர்காலத்தில் நல்ல துறையில் முன்னேறி, அடுத்த தலைமுறையினருக்கு அறிவுரை வழங்கு பவர்களாக நீங்கள் இருக்க வேண்டும். மாணவர்கள் ஒவ்வொருவரும் தமிழை நேசிக்க வேண்டும்; தமிழ் மொழியை காதலிக்க வேண்டும். ஏனெனில், தமிழைத் தவிர வேறு எந்த மொழியிலும் கவிதை தொகுப்புகள் கிடையாது. பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன் உள்ளிட்ட உள்ளிட்ட கவிஞர்களின் தொகுப்புகள் பரவலாக இங்கு உள்ளன.

வ.உ.சிதம்பரம், சிந்தனை செம்மல், நாமக்கல் கவிஞர், நாவலர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட பல்வேறு அறிஞர்கள் திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளனர். பல்வேறு மொழிகளிலும் திருக் குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் மட்டும், 40க்கும் மேற்பட்டோர் மொழிபெயர்த்துள்ளனர். திருக்குறளில் பல்வேறு நுணுக்கங்களை திருவள்ளுவர் வைத்துள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us