தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மாணவர்கள் அதிகம் படிக்க வேண்டும்: கலெக்டர்

 மாணவர்கள் அதிகம் படிக்க வேண்டும்: கலெக்டர்

 மாணவர்கள் அதிகம் படிக்க வேண்டும்: கலெக்டர்


ADDED : ஜன 25, 2026 06:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 25, 2026 06:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: திருப்பூர், ராயபுரத்தில்உள்ள மாணவியர் விடுதியில், நேற்று துவங்கிய மனிதநேய வார விழாவில் பங்கேற்ற கலெக்டர், 'மாணவர்கள் அதிகம் படிக்க வேண்டும்,' என்று வலியுறுத்தினார்.

கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ. கார்த்திகேயன், ஆர்.டி.ஓ. சிவபிரகாஷ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சதீஷ் முன்னிலை வகித்தனர். விழாவில், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

கலெக்டர் பேசியதாவது:

விடுதியில் தங்கி பயிலும் மாணவ, மாணவியர், விளையாட்டு வசதிகளையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.அனைத்து விடுதிகளுக்கும், போட்டி தேர்வு களுக்கான புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக, 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளுக்கான சிறப்பு புத்தகங்கள், தேர்வு வினா புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் முறையாக பயன்படுத்தி கொள்ளலாம்.

வெளிநாட்டு பல்கலை செல்ல சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கும், இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. வீட்டில் இருப்பவர்களை காட்டிலும், விடுதியில் உள்ள மாணவர்கள் அதிகம் படிக்க வேண்டும்; அரசு பணிக்கான போட்டித்தேர்வுகளில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும்.

இவ்வாறு, கலெக்டர் பேசினார்.

வாரவிழா, வரும் 30ம் தேதி வரை நடக்க உள்ளது. வரும், 27ம் தேதி ஆதிதிராவிடர் கல்லுாரி மாணவியர் குடியிருப்பில் தேநீர் விருந்து, 28ம் தேதி, மாவட்ட தொழில் மையம் மூலமாக சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் உள்ள டாக்டர், பொறியாளர், வக்கீல், தொழில்துறையினருடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி, 29ம் தேதி, திருப்பூர் கோட்ட அளவிலான நிகழ்ச்சி நஞ்சப்பா பள்ளியிலும், காங்கயம் கோட்ட அளவிலான நிகழ்ச்சி உடுமலையிலும், மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகளுடன் நடக்கிறது. வரும், 30ம் தேதி, ஆதி திராவிடர்கள் பங்கேற்கும் மதநல்லிணக்க கூட்டம் ரோட்டரி அரங்கில் நடக்க உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us