ADDED : ஜூன் 12, 2025 05:10 AM
பெருமாநல்லுார் : திருப்பூர் ஒன்றியம், பொங்குபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பொங்குபாளையம், காளம்பாளையம், கிருஷ்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் குடியிருப்புகள் உள்ளன.
இப்பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் பெருமாநல்லுார் மற்றும் கணக்கம் பாளையத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து வருகின்றனர்.
மாணவர்கள் தினசரி பள்ளி சென்று வர பஸ் வசதி இல்லாததால், பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
இதனால், மாணவர்கள் ஒன்று சேர்ந்து ஆட்டோவிலும், சிலர் நடந்தும், சிலர் லிப்ட் கேட்டும் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
பொதுமக்கள் கூறுகையில், ''இப்பகுதியில் போதிய பஸ் வசதி இல்லை. மாணவர்கள் செலவு செய்து ஆட்டோவில் செல்கின்றனர்.
எனவே மாணவர்கள் நலன் கருதி பள்ளி சென்று வரும் வகையில் காலை மற்றும் மாலை நேரத்தில் பஸ் இயக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.