/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உயர்கல்விக்கு செல்லாத மாணவர்கள்; பட்டியல் தயார் செய்ய அறிவுறுத்தல்
/
உயர்கல்விக்கு செல்லாத மாணவர்கள்; பட்டியல் தயார் செய்ய அறிவுறுத்தல்
உயர்கல்விக்கு செல்லாத மாணவர்கள்; பட்டியல் தயார் செய்ய அறிவுறுத்தல்
உயர்கல்விக்கு செல்லாத மாணவர்கள்; பட்டியல் தயார் செய்ய அறிவுறுத்தல்
ADDED : மே 05, 2025 10:44 PM
உடுமலை; கடந்தாண்டு மேல்நிலை வகுப்பு முடித்து, உயர்கல்வியில் சேராத மாணவர்கள் பட்டியல் தயார் செய்வதற்கு, அரசுப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடபட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, மேல்நிலை வரை மட்டுமின்றி, உயர்கல்வியும் இடைநிற்றல் இல்லாமல் தொடர்வதற்கு, உயர்கல்வி வழிகாட்டுதல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
கடந்த கல்வியாண்டுகளில், மேல்நிலை வகுப்பு முடித்த மாணவர்களுக்கு, உயர்கல்வியில் சேர்வதற்கான பல்வேறு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
தற்போது நடப்பு கல்வியாண்டும் நிறைவடைந்து, பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கு பள்ளி நிர்வாககங்கள் காத்திருக்கின்றன.
இந்நிலையில், கடந்த கல்வியாண்டில் மேல்நிலை முடித்து, இதுவரை உயர்கல்வியில் சேராத மாணவர்கள் பட்டியல் தயார் செய்வதற்கு, திருப்பூர் மாவட்ட அரசு பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அரசுப்பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது: கடந்த கல்வியாண்டில், 90 சதவீதம் பள்ளி மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வதற்கான ஏற்பாடுகள், அந்தந்த பள்ளிகளின் சார்பில் செய்யப்பட்டன. ஆனால், அதிலும் விடுபட்டுள்ள மாணவர்களை, தற்போது கண்டறிந்து பட்டியல் அனுப்ப கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும் அவர்கள் கல்வி இடைநிற்றல் காரணத்தை அறிந்து, மீண்டும் உயர்கல்வியை தொடர்வதற்கான ஏற்பாடு செய்வதற்கும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு, தெரிவித்தனர்.