/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'பட்டம்' இதழ் ஊட்டிய பட்டறிவு பட்டை தீட்டப்பட்ட மாணவர்கள்
/
'பட்டம்' இதழ் ஊட்டிய பட்டறிவு பட்டை தீட்டப்பட்ட மாணவர்கள்
'பட்டம்' இதழ் ஊட்டிய பட்டறிவு பட்டை தீட்டப்பட்ட மாணவர்கள்
'பட்டம்' இதழ் ஊட்டிய பட்டறிவு பட்டை தீட்டப்பட்ட மாணவர்கள்
ADDED : டிச 06, 2024 04:54 AM

திருப்பூர் 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் வினாடி - வினா போட்டியில் பங்கேற்ற பாரதி வித்யா பவன் பள்ளி மாணவ, மாணவியர், தங்கள் அறிவாற்றலைக் காட்டி அசத்தினர்.
மாணவர் மத்தியில் கற்றல் சார்ந்த தேடலை ஊக்குவிக்கும் வகையிலும், தேர்வுக்கு அவர்களை தயார்படுத்தும் நோக்கிலும், கடந்த, 2018 முதல், 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு 'பட்டம்' இதழ் சார்பில், 'வினாடி - வினா' போட்டி நடத்தப்படுகிறது.
'வினாடி - வினா விருது, 2024 -'25' போட்டி, 'தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ்; சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆகியன சார்பில் நடைபெற்று வருகிறது.
இவர்களுடன் எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனமும் கைகோர்த்துள்ளது; சத்யா ஏஜென்சிஸ் இணைந்து நடத்துகிறது.
கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து முன் பதிவு செய்த, 150க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இப்போட்டி நடத்தப் படுகிறது.
பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர் இடையே அரையிறுதிப் போட்டி நடைபெறும். இதில் இருந்து எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு, இறுதிப்போட்டி நடத்தப்பட உள்ளது. இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் காத்திருக்கின்றன.
திருப்பூர், பாலாஜி நகர், புதுார் ரோட்டில் உள்ள பாரதி வித்யா பவன் பள்ளியில் வினாடி - வினா போட்டி நேற்று நடத்தப்பட்டது. தகுதி சுற்றுக்கான போட்டியில், 230 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
இவர்களில் அதிக மதிப்பெண் பெற்ற, 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு, அவர்களுக்கு இடையே வினாடி - வினா போட்டி நடத்தப்பட்டது.
மூன்று சுற்றுகளாக நடந்த போட்டியில், 'பி' அணியில் இடம்பெற்ற, 8ம் வகுப்பு மாணவர் ஷாஹித், மாணவி அபிஷா ஆகியோர் முதலிடம் பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளித் தலைவர் செல்வராஜ், பள்ளி ஒருங்கிணைப்பாளர் கார்த்திகா, 'பட்டம்' ஒருங்கிணைப்பாளர் குணாளன், வினாடி - வினா ஒருங்கிணைப்பாளர் தீபிகா ஆகியோர் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி, பாராட்டினர்.