ADDED : மார் 11, 2024 12:09 AM
திருப்பூர்;தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் தேசிய திட்ட மேலாளர் ராஜீவ்குமார் சிங்கால், 'அடல் இன்குபேஷன்' மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் தேசிய திட்ட மேலாளர் ராஜீவ்குமார் சிங்கால், திருப்பூர் 'நிப்ட்-டீ' அடல் இன்குபேஷன் மையத்துக்கு வந்து, கடந்த சில நாட்களாக ஆய்வு மேற்கொண்டார்.
அங்குள்ள வசதி வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்தார். கிராமப்புற வாழ் வாதார மேம்பாடு முயற்சியில், அவற்றை பயன்படுத்துவதற்கான வழிகளை ஆராயவும், இன்குபேஷன் மையத்துக்கு சென்று பார்வையிட்டார்.
'அடல் இன்குபேஷன்' மையத் தலைமை செயல் அலுவலர் செந்தில்குமார், முதன்மை செயல்பாட்டு அலுவலர் அருள்செல்வன் ஆகியோர் இன்குபேஷன் மையத்தின் செயல்பாடுகள் குறித்து பேசினர். தேசிய திட்ட மேலாளர், புத்தாக்க நிறுவனங்கள் குறித்தும், திறன் பயிற்சி பெற்றது குறித்தும் கேட்டறிந்தார்.
கிராமப்புற தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க நிறுவனங்களுக்கான வாய்ப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது. தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கூடுதல் இயக்குனர் கவிதா, இன்குபேஷன் மையத்தின் மூலமாக, மகளிர் மற்றும் சுயஉதவி குழுக்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குவதற்கான வாய்ப்புகளை விளக்கி பேசினார்.
