/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெண்கள் கல்லுாரியில் தர மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு
/
பெண்கள் கல்லுாரியில் தர மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு
பெண்கள் கல்லுாரியில் தர மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு
பெண்கள் கல்லுாரியில் தர மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு
ADDED : செப் 30, 2024 05:20 AM
உடுமலை, : உடுமலை ஜி.வி.ஜி., விசாலாட்சி பெண்கள் கல்லுாரியில், தேசிய தர மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு நடத்தினர்.
உடுமலை ஜி.வி.ஜி., விசாலாட்சி பெண்கள் கல்லுாரியில், ஐந்தாவது சுழற்சியாக தேசிய தர மதிப்பீட்டு நாக் கமிட்டி இரண்டு நாள் ஆய்வு நடத்தியது.
இமாச்சல பிரதேஷ் வக்நாகாட் ஜெ.பி., தகவல் தொழில்நுட்ப பல்கலை., துணைவேந்தர் ராஜேந்திரகுமார்சர்மா தலைவராகவும், உத்தரபிரதேசம் தயால்பாக் கல்வி நிறுவன பேராசிரியர் லட்சுமிநாராயணன்கோலி ஒருங்கிணைப்பாளராகவும், மகாராஷ்டிரா மாநிலம் டி.எஸ்.பி.எம். கே.வி பெந்தர்க்கர் கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் அனுராதா உறுப்பினராகவும் கொண்ட தேசிய தர மதிப்பீடு குழுவினர் ஆய்வு நடத்தினர்.
பாடத்திட்டங்கள், கற்பித்தல், கற்றல் நடவடிக்கைகள், உள்கட்டமைப்பு, மாணவியர் மேம்பாடு, கல்லுாரியின் தனித்துவம் உட்பட ஏழு அளவுகோல்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்தனர்.
மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், பணியாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினரிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன.
கல்லுாரி தொடர்பான அனைத்து தகவல்களும் அறிக்கையாக சேகரிக்கப்பட்டு, தர மதிப்பீட்டு குழுவின் சார்பில், பெங்களூரில் உள்ள தலைமையகத்துக்கு அனுப்பப்படுகிறது என, கல்லுாரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

