/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கற்றல், எழுதுதல் திறன்; அரசு பள்ளிகளில் ஆய்வு
/
கற்றல், எழுதுதல் திறன்; அரசு பள்ளிகளில் ஆய்வு
ADDED : ஏப் 16, 2025 11:02 PM

பல்லடம்; திருப்பூர் மாவட்ட அரசு பள்ளி மாணவ மாணவியரிடையே, 100 சதவீத கற்றல், எழுதுதல் திறன் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கல்வித்துறை சார்ந்த இந்த ஆய்வுப் பணியில், மக்கள் பிரதிநிதிகள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் என, யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். கேத்தனுாரில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில், கற்றல் இலக்கு குறித்த ஆய்வு நடந்தது.
தலைமை ஆசிரியர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் சியாமளா, சித்த மருத்துவர் கல்யாணசுந்தரம், முன்னாள் ஊராட்சி தலைவர் சித்ரா ஹரிகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக, தமிழ், ஆங்கிலம் வாசித்தல், எழுதுதல், செய்தித்தாள் வாசித்தல், நுாலக நுால்கள் வாசித்தல் உள்ளிட்டவை குறித்து ஆய்வு நடந்தது. சிறப்பாக செயல்பட்ட மாணவ மாணவியருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதேபோல் பல்வேறு பள்ளிகளிலும் ஆய்வு நடைபெறுகிறது.