/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கற்றல் திறன் குறித்து பள்ளியில் ஆய்வு
/
கற்றல் திறன் குறித்து பள்ளியில் ஆய்வு
ADDED : அக் 27, 2025 11:17 PM

பல்லடம்: பல்லடம் ஒன்றியம், கே. அய்யம்பாளையம் ரேஷன் கடை வளாகத்தில் நடந்து வரும் மரக்கன்று நடும் பணியை, கலெக்டர் மனிஷ் நாரணவரே ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, அங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மாணவர்களுடன் கலந்துரையாடியும், அவர்களது கற்றல் திறன் குறித்தும் ஆய்வு செய்தார்.
முன்னதாக, திருப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சி வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் முதல்வர் மருந்தகம் ஆகியவற்றிலும் ஆய்வு செய்தார். மருந்துகளின் இருப்பு மற்றும் விற்பனை குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார். பி.டி.ஓ., பானுப்பிரியா, உதவி பொறியாளர் செந்தில் வடிவு உட்பட ஊரக வளர்ச்சி அதிகாரிகள் ஆய்வில் பங்கேற்றனர்.

