/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாணவர்களின் வாசிப்பு திறன் அரசு பள்ளியில் ஆய்வு
/
மாணவர்களின் வாசிப்பு திறன் அரசு பள்ளியில் ஆய்வு
ADDED : ஏப் 18, 2025 11:03 PM

உடுமலை: மடத்துக்குளம் ஒன்றியம், கருப்புசாமிபுதுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், மாணவர்களுக்கான கற்றல் திறன் மேம்பாட்டு ஆய்வு நடந்தது.
அரசுப்பள்ளிகளில், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த, 100 நாட்களில் 100 சதவீதம் என்ற தலைப்பில் வாசிப்புத்திறனுக்கான ஆய்வு மேற்கொள்வதற்கு, கல்வித்துறை அறிவித்திருந்தது.
துவக்கப்பள்ளிகளில், நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பும் மாணவர்களின் முழுமையானவாசிப்பு திறன் குறித்து, இந்த ஆய்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு வட்டாரத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட, 15 பள்ளிகளில் இந்த ஆய்வு நடக்கிறது.
மடத்துக்குளம் ஒன்றியம், கருப்புசாமிபுதுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இந்த ஆய்வு நடந்தது. வட்டாரக்கல்வி அலுவலர் சரவணன் தலைமையில், ஆசிரியர் பயிற்றுனர்கள் மாணவர்களின் வாசித்தல் திறன்களைசோதித்தனர்.
இந்நிகழ்வில், பள்ளி தலைமையாசிரியர் ஞானசேகரன், பள்ளி மேலாண்மைக்குழுவினர், பெற்றோர் பங்கேற்றனர். பாடப்புத்தகங்களில் உள்ள பகுதிகள், பொது அறிவு புத்தகங்கள் உள்ளிட்ட அனைத்தையும் மாணவர்கள் வாசித்து காண்பித்தனர்.

