தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அவிநாசியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க ஆய்வு

 அவிநாசியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க ஆய்வு

 அவிநாசியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க ஆய்வு


ADDED : மே 28, 2026 04:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 28, 2026 04:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அவிநாசி: அவிநாசி தாலுகா அலுவலகத்தில் அமைந்துள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உள்ளிட்டவை மிகவும் இட நெருக்கடி மற்றும் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. இதுதவிர, சூளையில் சார்பு நீதிமன்றம் வாடகை கட்டடத்தில் செயல்படுகிறது.

இதனால், அவிநாசி பகுதியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் ஒரே இடத்தில் அமைக்க வேண்டும் என வழக்கறிஞர்கள், வழக்குதாரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனை தொடர்ந்து, சென்னை ஐகோர்ட் நீதிபதியும், திருப்பூர் மாவட்ட பொறுப்பு நீதிபதியுமான தண்டபாணி, ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்யும் ஆய்வு பணியில் ஈடுபட்டார்.

இதில், அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள இடம் மற்றும் பழங்கரை ஊராட்சிக்குட்பட்ட அவிநாசி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் எதிரே உள்ள இரண்டு ஏக்கர் நிலம் ஆகியவற்றை பார்வையிட்டார். அவிநாசி சார்பு நீதிமன்ற நீதிபதி, குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிபதி, ஆர்.டி.ஓ. சிவப்பிரகாஷ், தாசில்தார் ஜெகநாதன், நகராட்சி கமிஷனர் அனுநந்தினி, அவிநாசி வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் பிரகாஷ், செயலாளர் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us