/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கருத்துான்றிப் படிப்பு; கைகூடிய சாதனை இன்ஜி., தரவரிசை; நால்வர் அசத்தல்

ADDED : ஜூன் 28, 2025 11:55 PM

திருப்பூர் : இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான தரவரிசையில், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பேர், முதல் பத்து இடங்களுக்குள் வந்து, சாதித்துள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் இன்ஜினியரிங் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டில், 1.7 லட்சத்துக்கு அதிகமான இடங்கள் உள்ளன. பொதுப்பிரிவு கவுன்சிலிங்கில் பங்கேற்க தகுதி பெற்ற 2.41 லட்சம் பேருக்கான, தரவரிசை பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.
இதில் முதல் பத்து இடங்களில், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த நான்கு மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர். தாராபுரம், விவேகம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் கிருஷ்ணபிரியன் நான்காமிடம்; அம்மாபாளையம், ராமகிருஷ்ணா வித்யாலயா பள்ளி மாணவர் விஷால்ராம் ஏழாமிடம்; காங்கயம், சுவாமி விவேகானந்தா மெட்ரிக் பள்ளி மாணவி சுபஸ்ரீ, ஒன்பதாம் இடம்; திருப்பூர், கூலிபாளையம், விகாஸ் வித்யாலயா பள்ளி மாணவி கோதை காமாட்சி பத்தாமிடம் பெற்றுள்ளனர்.செயலில் அர்ப்பணிப்பு; கவனம் சிதறாமை என கருத்துான்றிப் படித்ததால் இந்தச் சாதனையை மேற்கொள்ள முடிந்ததாக இவர்கள் தெரிவித்தனர்.