/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சப்-ஜூனியர் கூடைப்பந்து : வீரர்கள் தேர்வு துவக்கம்
/
சப்-ஜூனியர் கூடைப்பந்து : வீரர்கள் தேர்வு துவக்கம்
சப்-ஜூனியர் கூடைப்பந்து : வீரர்கள் தேர்வு துவக்கம்
சப்-ஜூனியர் கூடைப்பந்து : வீரர்கள் தேர்வு துவக்கம்
ADDED : ஜூலை 29, 2025 11:44 PM
திருப்பூர்; திருப்பூர் மாவட்ட அளவிலான சப் ஜூனியர் பிரிவு கூடைப்பந்து தேர்வு போட்டி நடத்தப்பட உள்ளது.
திருப்பூர் மாவட்ட கூடைப்பந்து கழகத்தின் சார்பில் நாளை மறுநாள், (31ம் தேதி) மற்றும் வரும், 1ம் தேதி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய திருப்பூர் பிரிவு கூடைப்பந்து மைதானத்தில், மாவட்ட அளவிலான சப்-ஜூனியர் பிரிவு, கூடைப்பந்து வீரர், வீராங்கனையர் தேர்வு போட்டி நடத்தப்பட உள்ளது. பங்கேற்க விருப்பமுள்ள பள்ளி மாணவ, மாணவியர் தங்கள் பள்ளி முதல்வர், தலைமையாசிரியரிடம் இருந்து, வயதுச்சான்று, ஒப்புதல் கடிதம் பெற்று வர வேண்டும்.
நுழைவுக்கட்டணம் இல்லை. நாளை (31ம் தேதி) மாலை, 4:00 மணிக்கு சப்- ஜூனியர் பிரிவு மாணவியருக்கும், வரும், 1ம் தேதி மாலை, 4:00 மணிக்கு சப்- ஜூனியர் பிரிவு மாணவர்களுக்கும் தேர்வு போட்டி நடத்தப்பட உள்ளது. 1.1.2012 அன்றோ, அதற்கு பின்னரோ பிறந்தவர்களாக இருக்க வேண்டும். கூடுதல் விவரம் தேவைப்படுவோர், 94430 58880 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்,' என, திருப்பூர் மாவட்ட கூடைப்பந்து சங்க செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.