தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம்

 துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம்

 துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம்


ADDED : பிப் 14, 2026 07:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2026 07:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட வருவாய்த்துறையில், துணை தாசில்தார் ஆறு பேர் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்ட வருவாய்த்துறையில், 2 தாசில்தார் மற்றும் 6 துணை தாசில்தார்கள், 120 நாட்கள் நீதித்துறை பயிற்சிக்கு செல்கின்றனர். இதனால், துணை தாசில்தார்களை பணியிட மாறுதல் செய்தும், நியமனம் வழங்கி யும் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

நீதித்துறை பயிற்சிக்கு செல்லும் ஈஸ்வரமூர்த்திக்கு பதிலாக, பாரதிராஜா, தாராபுரம் துணை தாசில்தாராக (தேர்தல்) பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

ராஜேந்திர பூபதிக்கு பதிலாக, ஆனந்தராஜ் உடுமலைக்கும் (தேர்தல்), கீர்த்திபிரபாவுக்கு பதிலாக வசந்தா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக தலைமை உதவியாளராகவும் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

சுப்பிரமணியத்துக்கு பதிலாக, செந்தில்பிரபு, தாராபுரம் வட்ட வழங்கல் அலுவலராகவும், கோபாலுக்கு பதிலாக தலைமை உதவியாளர் சிவசக்தி, திருப்பூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு துணை தாசில்தாராகவும்; பிரபுவுக்கு பதிலாக, பெரியசாமி, பல்லடம் வட்ட வழங்கல் அலுவலராகவும் செல்கின்றனர்.

மடத்துக்குளம் தலைமையிடத்து துணை தாசில்தார் வளர்மதிக்கு, மண்டல துணை தாசில்தாராகவும், திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலக மண்டல துணை தாசில்தார் அருள்குமாருக்கு, தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், தாராபுரம் தாலுகா அலுவலக மண்டல துணை தாசில்தார் தேன் மொழிக்கு, துணை தாசில்தாராகவும் (மகளிர் உரிமை திட்டம்) பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

துணை தாசில்தார்கள், பணி நியமனம் செய்யப்பட்டுள்ள பணியிடத்தில் உடனடியாக இணைய வேண்டும். நிர்வாக நலன் கருதி மேற்கொள்ளப்பட்டுள்ள பணி நியமனம் தொடர்பாக எவ்வித கோரிக்கைகள் மற்றும் மேல்முறையீடுகளும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என, கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us