ADDED : பிப் 05, 2024 01:26 AM

அ நிறம் | அளவு
திருப்பூர்;திருப்பூர், இடுவம்பாளையம், முருகம்பாளையத்தில் உள்ள சுபாஷ் மெட்ரிக் பள்ளி கடந்த, 25 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
பள்ளி ஆண்டு விழாவுக்கு தாளாளர் சிந்து சுப்ரமணியம் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக அரங்க கோபாலன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் ரேணுகா ஆண்டறிக்கையை வாசிக்க, பள்ளி செயலாளர் பிரபு, பரிசுகளை வழங்கினார். கலைநிகழ்ச்சிகள் நடந்தன. ராஜேந்திரன் நன்றி கூறினார்.
