/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிவன்மலையில் தைப்பூசத் திருவிழா நிறைவு: மலைக் கோவிலுக்கு எழுந்தருளினார் சுப்ரமணியசுவாமி
/
சிவன்மலையில் தைப்பூசத் திருவிழா நிறைவு: மலைக் கோவிலுக்கு எழுந்தருளினார் சுப்ரமணியசுவாமி
சிவன்மலையில் தைப்பூசத் திருவிழா நிறைவு: மலைக் கோவிலுக்கு எழுந்தருளினார் சுப்ரமணியசுவாமி
சிவன்மலையில் தைப்பூசத் திருவிழா நிறைவு: மலைக் கோவிலுக்கு எழுந்தருளினார் சுப்ரமணியசுவாமி
ADDED : பிப் 20, 2025 06:55 PM

காங்கேயம்:சிவன்மலை சுப்ரமணியசுவாமி தைப்பூசத் திருவிழா நிறைவு பெற்றது, மலை அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் இருந்து மலைக் கோவிலுக்கு எழுந்தருளினார் சுவாமி.
காங்கேயம் அடுத்துள்ள சிவன்மலை சுப்ரமணியசாமி கோவிலில் தைப்பூசத் திருவிழா, கடந்த ஜன.2ம் தேதி மலை அடிவாரத்தில் உள்ள வீரகாளியம்மன் தேர்த்திருவிழாவுடன் துவங்கியது. மலைக் கோவிலில் சிறப்பு வழிபாடும், கோவில் சன்னதி முன் உள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது.
சாமி மலை அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலுக்கு எழுந்தருளினார். 10ம் தேதி மைசூர் பல்லக்கில் சுவாமி மலையை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேரோட்டம் கடந்த 11ம் தேதி துவங்கி, மலையைச் சுற்றி வலம் வந்து, 13ம் தேதி தேர் நிலை அடைந்தது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். கடந்த 16 ம் தேதி அடிவாரத்தில் உள்ள கோயில் தெப்பக்குளத்தில் பரிவேட்டை தெப்ப உற்சவமும், 17 ம் தேதி மகா தரிசனமும் நடைபெற்றது. தைப்பூச நிறைவு நாளான நேற்று மாலை 5:30 மணியளவில் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது.
மாலை 6:00 மணிக்கு மலை அடிவாரத்தில் இருந்த நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் இருந்து சுப்ரமணியர், வள்ளி, தெய்வானையுடன் பல்லாக்கில் மலைக் கோவிலுக்கு எழுந்தரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் வழி நெடுகிலும் சுவாமிக்கு ஆரத்தி எடுத்னர், அடிவாரத்தில் 1000 தேங்காய்கள் உடைக்கப்பட்டு நேர்த்திகடன் செலுத்தினர். மலைக் கோவிலில் அபிஷேகமும், சிறப்பு வழிபாடும் நடைபெற்றது. இரவு திருவிழா கோடி இறக்குதல், பாலிகை நீர்த்துறை சேர்தலுடன் சிவன்மலை முருகன் கோவிலில் தைப்பூச விழா நிறைவு பெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயிலின் உதவி ஆணையர் மற்றும் கோவில் ஊழியர்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.

