தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தொழில்முனைவோருக்கு மானிய கடன் அனுமதி

 தொழில்முனைவோருக்கு மானிய கடன் அனுமதி

 தொழில்முனைவோருக்கு மானிய கடன் அனுமதி


ADDED : டிச 20, 2025 08:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 20, 2025 08:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

திருப்பூர் மாவட்ட தொழில் மையம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில், கடன் முகாம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கலெக்டர் மனிஷ் நாரணவரே துவக்கிவைத்தார். மாவட்ட தொழில் மையம் மேலாளர் கார்த்திகை வாசன் வரவேற்றார்.

மாவட்ட முன்னோடி வங்கி (கனரா) மேலாளர் துர்க்கபிரசாத், கடன் வசதி ஆலோசகர் வணங்காமுடி, மாவட்ட தொழில்மைய உதவி இயக்குனர் தாரிக் ஆகியோர், வங்கி கடன்கள், அரசு நலத்திட்டங்கள் குறித்து விளக்கி பேசினர்.

அனைத்து பொதுத்துறை வங்கிகளின் அலுவலர்கள் பங்கேற்றனர். குறு, சிறு, நடுத்தர தொழில்முனைவோர், பல்வேறுவகையான தொழில் கடன்கள் கேட்டு, திட்ட அறிக்கை உள்பட ஆவணங்களுடன், விண்ணப்பம் அளித்தனர்.

அவ்விண்ணப்பங்கள், வங்கி அலுவலர்களால் சரிபார்க்கப்பட்டு, கடன் அனுமதி வழங்கப்பட்டது. முகாமில், மகளிர் தொழில்முனைவோர் அதிகாரமளிப்பு திட்டத்தின் கீழ், 42 விண்ணப்பங்கள், கலைஞர் கைவினை திட்டத்தில் 11, அம்பேத்கர் திட்டத்தில் 5, புதிய தொழில்முனைவோர் மேம்பாட்டுத்திட்டத்தில் 1 என, 59 பயனாளிகளுக்கு, மொத்தம், 1.47 கோடி ரூபாய் மானியத்துடன் கூடிய கடன் அனுமதி வழங்கப்பட்டது.

மீதமுள்ள விண்ணப்பங்கள், உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டபின்னர், பரிசீலிக்கப்பட்டு, கடன் அனுமதி வழங்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us