/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விவசாயிகளுக்கு மானியத்தில் விதை, இடு பொருட்கள்
/
விவசாயிகளுக்கு மானியத்தில் விதை, இடு பொருட்கள்
ADDED : அக் 12, 2025 10:42 PM
உடுமலை:உடுமலை பகுதிகளில் தற்போது பரவலாக மழை பெய்துள்ள நிலையில், சாகுபடிக்கு தேவையான மக்காச்சோளம், தானியங்கள் மற்றும் இடு பொருட்கள் மானிய விலையில் வினியோகிக்கப்படுகிறது.
உடுமலை பகுதிகளில் தற்போது பரவலாக மழை பெய்துள்ளது. இந்நிலையில், விவசாயிகள் மக்காச்சோளம் மற்றும் தானியங்கள் பயிரிட ஆயத்தமாகி வருகின்றனர். இதனால், விவசாயிகளுக்கு தேவையான விதைகள் மற்றும் இடு பொருட்கள் வேளாண் துறை சார்பில், மானிய விலையில் வழங்கப்படுகிறது.
உடுமலை வேளாண் துறை, குறிச்சிக்கோட்டை மற்றும் சாளையூர் துணை வேளாண் விரிவாக்க மையங்களில், சோளம், உளுந்து, வீரிய ஒட்டு ரக மக்காச்சோளம், கம்பு விதைகள் தேவையான அளவு இருப்பு உள்ளது.
அதே போல், மக்காச்சோளம் தொகுப்பு திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு, 10 கிலோ மக்காச்சோளம் விதை, 12.5 லிட்டர் இயற்கை டானிக், நானோ யூரியா அரை லிட்டர் ஆகியவை வழங்கப்படுகிறது.
தேவைப்படும் விவசாயிகள் சிட்டா, ஆதார் அட்டை நகல், வங்கி பாஸ் புத்தக நகல் ஆகியவற்றுடன் வேளாண் துறை அலுவலகங்களை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளுமாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.