/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பசுந்தீவன உற்பத்திக்கு மானிய திட்டம் ;சிறப்பு முகாம் நடத்தவும் எதிர்பார்ப்பு
/
பசுந்தீவன உற்பத்திக்கு மானிய திட்டம் ;சிறப்பு முகாம் நடத்தவும் எதிர்பார்ப்பு
பசுந்தீவன உற்பத்திக்கு மானிய திட்டம் ;சிறப்பு முகாம் நடத்தவும் எதிர்பார்ப்பு
பசுந்தீவன உற்பத்திக்கு மானிய திட்டம் ;சிறப்பு முகாம் நடத்தவும் எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 27, 2025 09:29 PM
உடுமலை; பருவமழை தீவிர மடைந்துள்ள நிலையில், தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ், பசுந்தீவன உற்பத்திக்கு, மானியத்தில் விதைகள் மற்றும் இடுபொருட்கள் வழங்கவும், நோய்த்தடுப்பு முகாம்கள் நடத்தவும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில், பால் உற்பத்தி மற்றும் இதர தேவைகளுக்காக, 60 ஆயிரத்திற்கும் அதிகமான மாடுகள் மற்றும் எருமைகள் வளர்க்கப்படுகின்றன.
பால் உற்பத்தியை அதிகரிக்க, பருவமழை துவங்கும் முன், கால்நடைத்துறை சார்பில், தீவனப்புல் வளர்ப்பிற்கான இடு பொருட்கள் தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வினியோகிக்கப்படும்.
தீவனப்புல் வளர்ப்பு திட்டத்தில், சோளம், அசோலா, ஊறுகாய்புல் சாகுபடிக்கு, தேவையான விதை மற்றும் இதர இடுபொருட்கள் மானியத்தில் வழங்கப்பட்டது.
விளைநிலங்களில், மழை நீர் தெளிப்பான் அமைக்கவும், கால்நடை கிளை நிலையம் மற்றும் மருந்தகம் வாயிலாக பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு மானிய திட்டத்தை செயல்படுத்தினர். சில ஆண்டுகளாக இத்தகைய மானியத்திட்டத்துக்கு, கால்நடைத்துறையில் முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை.
மேலும், பருவநிலை மாற்றங்களால், கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்த்தாக்குதலை தடுக்கவும், சிகிச்சை வழங்கவும், சிறப்பு கால்நடை பராமரிப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வந்தன. தற்போது மழைக்காலத்தில், இத்தகைய முகாம் நடத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
விவசாயிகள் கூறுகையில், பால் உற்பத்தியை அதிகரிக்க, பசுந்தீவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேய்ச்சல் நிலங்கள் வெகுவாக குறைந்துள்ளது; விளைநிலங்களிலும் களைக்கொல்லி பயன்பாடு அதிகரித்துள்ளதால், பசுந்தீவன தட்டுப்பாடு நிலவுகிறது.
எனவே, தீவன உற்பத்திக்கான விதைகளை தற்போதைய சீசனில் வழங்க வேண்டும். மழைக்காலத்தில், ஆடு, மாடுகளுக்கு பரவும் நோய்களை கட்டுப்படுத்த, கிராமங்களில் சிறப்பு முகாம் நடத்த வேண்டும்,' என்றனர்.