/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சின்னவெங்காயம் இருப்பு வைக்கும் பட்டறைக்கு மானியம் ஒதுக்கணும்
/
சின்னவெங்காயம் இருப்பு வைக்கும் பட்டறைக்கு மானியம் ஒதுக்கணும்
சின்னவெங்காயம் இருப்பு வைக்கும் பட்டறைக்கு மானியம் ஒதுக்கணும்
சின்னவெங்காயம் இருப்பு வைக்கும் பட்டறைக்கு மானியம் ஒதுக்கணும்
ADDED : மார் 14, 2024 11:18 PM
உடுமலை;உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், ஒவ்வொரு சீசனிலும், 20 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக கிணற்றுப்பாசனத்துக்கு, சின்னவெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது.
காய்கறி சாகுபடியில், சின்னவெங்காயம் சாகுபடிக்கே, அதிக செலவாகிறது. இருப்பினும், சீசன்களில், நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், இச்சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்கின்றனர்.
ஏக்கருக்கு, 60 ஆயிரம் ரூபாய் வரை செலவிட்டு, போதிய விலை கிடைக்காவிட்டால், கடனாளியாகும் நிலை உருவாகிறது.
இதைத்தவிர்க்க, சின்னவெங்காயத்தை இருப்பு வைத்து விற்பனை செய்ய, தேவையான வசதிகளை, ஏற்படுத்தித்தர வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, விளைநிலங்களில், பட்டறை அமைத்தால், நான்கு மாதங்கள் வரை, வெங்காயத்தை இருப்பு வைத்து விற்கலாம்.
இந்த பட்டறை அமைக்க அதிக செலவு பிடிப்பதால், பெரும்பாலான சிறு, குறு விவசாயிகள், அறுவடையின் போது கிடைக்கும் குறைந்த விலைக்கு, சின்னவெங்காயத்தை விற்பனை செய்து விடுகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வாக தோட்டக்கலைத்துறை சார்பில், 50 சதவீத மானியம், பட்டறை அமைக்கும் திட்டம் சில ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், ஒதுக்கீடு குறைவாக இருப்பதால், குறைந்தளவு பயனாளிகளே பயன்பெற்று வருகின்றனர்.
எனவே, தமிழக அரசு, பிரதான சாகுபடியில், விவசாயிகள் பாதிப்பதை தவிர்க்க, கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

