/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
டிரைவர் திடீர் உயிரிழப்பு; சுகாதாரத்துறை விசாரணை
/
டிரைவர் திடீர் உயிரிழப்பு; சுகாதாரத்துறை விசாரணை
ADDED : செப் 23, 2024 12:50 AM
பல்லடம் : சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட செஞ்சேரிமலையை சேர்ந்தவர் பிரபு 21; தனியார் டிரைவர். நேற்று முன்தினம், வயிறு வலிப்பதாக கூறி, செஞ்சேரிமலையில் உள்ள தனியார் கிளினிக் ஒன்றில் சிகிச்சை பெற்ற பின் வீடு திரும்பினார்.
தொடர்ந்து, மதியம், 1.45 மணிக்கு, பாத்ரூம் சென்ற பிரபு, அங்கேயே மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன், கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக, கிட்டான் மனைவி ரங்காள் அளித்த புகாரின் பேரில், சுல்தான்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும், தனியார் கிளினிக்கில் சிகிச்சை பெற்ற பின் பிரபு உயிரிழந்ததால், சிகிச்சையில் ஏதேனும் தவறு உள்ளதா அல்லது சிகிச்சையின் போது வழங்கப்பட்ட மருந்து, மாத்திரைகளில் ஏதேனும் பிரச்னை உள்ளதா என்பது குறித்து, மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.