தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ துாய்மை பணியாளர் திடீர் வேலைநிறுத்தம்

துாய்மை பணியாளர் திடீர் வேலைநிறுத்தம்

துாய்மை பணியாளர் திடீர் வேலைநிறுத்தம்


ADDED : பிப் 08, 2025 11:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2025 11:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சியில், தனியார் நிறுவனம் மூலம் திடக்கழிவு மேலாண்மை பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தினசரிக் கூலி வழங்கப்படுகிறது. இந்நிலையில் நடப்பு மாதம் வழங்கிய சம்பளத்தில் பெரும்பாலானோருக்கு பிடித்தம் செய்யப்பட்டிருந்தது.

ஏற்கனவே குறைந்த சம்பளம், உரிய நாளில் சம்பளம் வருவதில்லை போன்ற பிரச்னைகளுக்கு இடையே அவர்கள் பணியாற்றி வரும் நிலையில், வழங்கிய சம்பளத்தில் காரணமின்றி பிடித்தம் செய்யப்பட்டது அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால், நேற்று காலை இந்த பணியாளர்கள் வேலைக்குச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் குடியிருப்பு பகுதியிலிருந்து பணிக்கு செல்லாமல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். துாய்மைப்பணியாளர் மட்டுமின்றி அதில் பணியாற்றும் மேற்பார்வையாளர்களும் பணிக்குச் செல்லவில்லை.

தனியார் நிறுவன அலுவலர்கள் சென்று பேச்சு நடத்தினர். சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உறுதி அளிக்கப்பட்டது. இதனால், பெரும்பாலானோர் பணிக்கு திரும்பினர். சிலர் சம்பள பிரச்னைக்கு தீர்வு காணப்பட்ட பின்னரே பணிக்குச் செல்வதாக கூறி சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us