/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
12 தாசில்தார் திடீர் இடமாற்றம்..
/
12 தாசில்தார் திடீர் இடமாற்றம்..
ADDED : செப் 29, 2024 01:54 AM
திருப்பூர்: நிர்வாக நலன்கருதி, 12 தாசில்தார்கள் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
தாராபுரம் தாசில்தார் கோவிந்தசாமி, வாணிப கழக உதவி மேலாளராக மாற்றப்பட்டுள்ளார். அங்கிருந்த நந்தகோபால், காங்கயம் சமூக பாதுகாப்பு தாசில்தாராகவும்; அங்கிருந்த செல்வி, காங்கயம் கலால் மேற்பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.கலால் மேற்பார்வையாளராக இருந்த தமிழேஸ்வரன், கலெக்டர் அலுவலக சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார். திருப்பூர் தெற்கு தாசில்தார் மோகனன், காங்கயத்துக்கும், அங்கிருந்த மயில்சாமி, திருப்பூர் தெற்கு தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஊத்துக்குளி தாசில்தார் சரவணன், கலெக்டர் அலுவலக மேலாளராக (குற்றவியல்) மாற்றப்பட்டுள்ளார். தாராபுரம் தனி தாசில்தார் முருகேஸ்வரன், ஊத்துக்குளி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாவட்ட கலால் அலுவலக மேலாளர் அருணா, உடுமலை ஆர்.டி.ஓ., வின் நேர்முக உதவியாளராகவும், அங்கிருந்த ஜலஜா, உடுமலை குடிமைப்பொருள் தனி தாசில்தாராகவும்; அங்கிருந்த கார்த்திகேயன், தாராபுரம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர். இதேபோல், துணை தாசில்தார் நிலையில், ஒன்பது பேர் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.