sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மின் தடையால் இன்னல்; குடிநீர் சப்ளையில் சிக்கல்

/

மின் தடையால் இன்னல்; குடிநீர் சப்ளையில் சிக்கல்

மின் தடையால் இன்னல்; குடிநீர் சப்ளையில் சிக்கல்

மின் தடையால் இன்னல்; குடிநீர் சப்ளையில் சிக்கல்


ADDED : பிப் 18, 2024 01:58 AM

Google News

ADDED : பிப் 18, 2024 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி:அவிநாசியில், ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு குடிநீர் சேமிப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளில் ஒரே நாளில் செய்திட வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அவிநாசி பேரூராட்சியில், 18 வார்டுகளில் 40 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். பேரூராட்சி பகுதிக்கு சிறுமுகை பவானி ஆற்றில் இருந்து, அவிநாசி - அன்னுார் கூட்டு குடிநீர் திட்டத்தில், குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

இதற்காக, குடிநீரை சேமித்து, சப்ளை செய்ய சூளை, வ.உ.சி., பூங்கா, காமராஜ் நகர், கைகாட்டிபுதுார் சந்தை மேடு, சீனிவாசபுரம் மற்றும் ராயம்பாளையம் ஆகிய இடங்களில் மேல்நிலை மற்றும் தரைமட்ட தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன.

இதில், ராயம்பாளையத்தில் ஒரு லட்சம் லி., கொள்ளளவு கொண்ட இரண்டு, வாரச்சந்தையில், 2 லட்சம் லி., கொள்ளளவு கொண்ட ஒன்று என மேல்நிலை தொட்டி, மூன்றாம் திட்டத்திலும், வாரச்சந்தையில், 1.65 லட்சம் லி., கொள்ளளவு கொண்ட தரைமட்ட தொட்டி நான்காம் திட்டத்திலும் கட்டப்பட்டுள்ளன.

குடிநீர் சப்ளையில் சிக்கல்

--------------------

வ.உ.சி., பூங்கா, சூளை, காமராஜ் நகர், சீனிவாசபுரம், கைகாட்டிப்புதுார் ஆகிய பகுதிகளில் உள்ள மேல்நிலைத் தொட்டிக்கு அவிநாசி நகர துணை மின் நிலையத்தில் இருந்து, நடுவச்சேரி பீடர் வழியாக மின்வினியோகம் செய்யப்படுகிறது. வாரச்சந்தை பகுதியில் உள்ள குடிநீர் தொட்டிகளுக்கு, பழங்கரை துணை மின் நிலையம் பகுதியில் இருந்து கைகாட்டிப்புதுார் பீடர் வழியாக மின் வினியோகம் செய்யப்படுகிறது.

இதனால், மாதத்தில் அவிநாசி நகர் பகுதியில் முதல் சனிக்கிழமையும், 2வது வியாழன் பழங்கரையிலும் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதே போல அவிநாசி பகுதிகளுக்கு குடிநீர் எடுக்கப்படும் இடமான சிறுமுகை மற்றும் சுமைதாங்கி சுத்திகரிப்பு நிலையத்தில் மாதத்தில் ஒரு நாள் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனால், அவிநாசி பேரூராட்சி வார்டு பகுதிகளில் மூன்று முதல் நான்கு நாட்களுக்கு குடிநீர் வினியோகம் என செய்யப்பட்டு வந்து நிலை மாறி, எட்டு முதல் ஒன்பது நாட்களை கடந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் தண்ணீர் தேவை அதிகரித்துள்ளதாலும், அவிநாசி மற்றும் சுற்று வட்டார பகுதியில் குடியேறி வரும் மக்கள் தொகை அதிகரிப்பாலும் குடிநீர் தேவை அதிகரித்து வருகிறது.

9 - 10 நாளாகிறது

--------------

அவிநாசி பேரூராட்சி பொதுமக்கள் கூறியதாவது:

கடந்த நான்கைந்து ஆண்டுகளுக்கு முன், 3 - 4 நாளுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. தற்போது அந்நிலை மாறி, 9 - 10 நாளை தாண்டி விடுகிறது. இதனால், குடிநீர் தேவை அதிகரிக்கிறது. நகர் பகுதியில் சூளை, வ.உ.சி., பூங்கா ஆகிய இடங்களில் மேல்நிலைத் தொட்டியில் இருந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு குடிநீர் நாள் ஒன்றுக்கு நான்கு முதல் ஐந்து மணி நேரம் சப்ளை செய்யப்படுகிறது.

அதுபோல பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மேல்நிலைத் தொட்டிக்கு அருகில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு குடிநீர் குழாய் அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஒரே நாள்... ஒரே மின்தடை!

அவிநாசி பேரூராட்சி, 16வது வார்டு கவுன்சிலர் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:மேட்டுப்பாளையம், சிறுமுகை மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ள சுமைதாங்கி பகுதி ஆகியவற்றில், வெவ்வேறு நாட்களிலும், அவிநாசி நகர் பகுதியில் ஒரு நாளும், பழங்கரை துணை மின் நிலையத்தில் மற்றொரு நாளிலும் என மாதத்தில் நான்கு நாட்கள் சுழற்சி முறையில் மின்தடை ஏற்படுவதால் பல்வேறு சிக்கல் ஏற்படுகிறது.இதுதவிர, பொதுமக்களுக்கு பேரூராட்சி சார்பில் சீரான முறையில் குடிநீர் வழங்க முடிவதில்லை. பேரூராட்சி மட்டுமின்றி, மற்ற வார்டு பகுதி, கிராமப்பகுதிகளுக்கு செல்லும்போதும் குடிநீர் வினியோகம் பத்து நாட்களை தாண்டி விடுகிறது.எனவே, மின்வாரியத்தினர் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மேற்கண்ட பகுதிகளில் ஒரே நாளில் மின் தடை ஏற்படுத்த வேண்டும். இதனால், சீரான குடிநீர் வினியோகம் பொதுமக்களுக்கு கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us