/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விசாரணைக்கு பயந்து ஒருவர் தற்கொலை
/
விசாரணைக்கு பயந்து ஒருவர் தற்கொலை
ADDED : பிப் 19, 2025 10:53 PM
அனுப்பர்பாளையம் ; போலீஸ் விசாரணைக்கு பயந்து ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
திருப்பத்துாரை சேர்ந்தவர் இளங்கோ, 42; திருப்பூர் போயம் பாளையம் குருவாயூரப்பன் நகரில் தங்கி ஆன்லைன் மார்க்கெட்டிங் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இளங்கோவிற்கு போயம் பாளையம் பகுதியை சேர்ந்த 36 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்பட்டுளது.
இருவரும் திருமணம் செய்யாமல் தம்பதியர் போல் வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், பெண்ணுக்கு பெற்றோர்கள் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமண ஏற்பாடு செய்துள்ளனர்.
பெண்ணும் வேறு ஒருவருடன் திருமணத்திற்கு தயாராகி இளங்கோவை விட்டு விலகி செல்ல முடிவு எடுத்துள்ளார்.
இந்நிலையில், 'நீ என்னுடன்தான் வாழ வேண்டும். வேறு நபரை திருமணம் செய்யக்கூடாது' என வற்புறுத்தி வந்துள்ளார்.
அவர்கள் இருவரும் சேர்ந்து இருந்த புகைப்படத்தை பெண்ணின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி பெண்ணை மிரட்டியுள்ளார். அந்தப் பெண் அனுப்பர்பாளையம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் இளங்கோவை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்கு மீண்டும் வர வேண்டும் என்று கூறியுள்ளனர்.
விசாரணைக்கு பயந்த இளங்கோ இரவு வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்த இளங்கோ, 'உன்னை முழுமையாக நம்பினேன். நீ என்னை ஏமாற்றி விட்டாய்' என பெண்ணுக்கு உருக்கமான கடிதம் எழுதி வைத்துள்ளார். அனுப்பர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

