தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கோடைக்கால பயிற்சி முகாம்

கோடைக்கால பயிற்சி முகாம்

கோடைக்கால பயிற்சி முகாம்


ADDED : ஏப் 17, 2025 10:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2025 10:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை,; தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடத்தப்பட உள்ள கோடைக்கால பயிற்சி முகாமில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்ட விளையாட்டரங்கில் வரும், 25 முதல், மே, 15 வரை 21 நாட்கள், கோடைக்கால பயிற்சி முகாம் நடக்கிறது; 18 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவியர் மற்றும் மாணவர் அல்லாதோரும் பங்கேற்கலாம்.

----தடகளம், கூடைப்பந்து, வாலிபால், கால்பந்து, பேட்மின்டன், குத்துச்சண்டை, ஜூடோ மற்றும் டேக்வாண்டோ விளையாட்டுகளுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதில், பங்கேற்க விரும்புவோர், வரும், 24ம் தேதி, மாலை 6:00 மணி வரை, மாவட்ட விளையாட்டு அரங்கில் பெயர் பதிவு செய்யலாம். மேலும் தகவல்களுக்கு, 2244899, 86109 00142 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இத்தகவலை திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us