/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோடை விடுமுறை; காய்கறி விற்பனை மந்தம்
/
கோடை விடுமுறை; காய்கறி விற்பனை மந்தம்
ADDED : மே 18, 2025 12:32 AM

திருப்பூர், : பள்ளிகள் கோடை விடுமுறை காரணமாக, தென்னம்பாளையம் மார்க்கெட்டில் காய்கறி விற்பனை மந்தமாகியுள்ளது.
மே 1ல் கோடை விடுமுறை துவங்கியது; பள்ளிகளில், விடுமுறை விடப்பட்டது. வழக்கமாக பள்ளி வேலை நாள் என்றால், தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட்டில் அதிகாலை முதலே காய்கறி விற்பனை சுறுசுறுப்பாக இருக்கும்.
மளிகைக்கடை, காய்கறி நடத்துபவர்கள் காய்கறிகளை கொள்முதல் செய்து, விற்பனைக்கு எடுத்துச் செல்வர். பள்ளி விடுமுறை என்பதாலும், கோடை விடுமுறைக்கு பலர் வெளியூர் சென்றாலும், கடைகளில் காய்கறி விற்பனை மந்தமாகியுள்ளது. இதனால், மொத்தமாக வாங்கி விற்பவர்கள் தென்னம்பாளையம் காய் வாங்கும் அளவை மூன்றிலும் ஒரு பங்காக குறைந்துள்ளனர். இதனால், காய்கறிகள் தேக்கமாகி விலையும் குறைய துவங்கியுள்ளது.
பள்ளி விடுதிகளும் விடுமுறை என்பதால், காய்கறிகளை வாங்கி இருப்பு வைப்பதும் குறைந்துள்ளது.