/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
சண்டே வசீகரிக்கும் வண்ணத்துப்பூச்சிஉயிர் சூழல் மண்டல உயிர்ப்புக்கு சாட்சி
/
சண்டே வசீகரிக்கும் வண்ணத்துப்பூச்சிஉயிர் சூழல் மண்டல உயிர்ப்புக்கு சாட்சி
சண்டே வசீகரிக்கும் வண்ணத்துப்பூச்சிஉயிர் சூழல் மண்டல உயிர்ப்புக்கு சாட்சி
சண்டே வசீகரிக்கும் வண்ணத்துப்பூச்சிஉயிர் சூழல் மண்டல உயிர்ப்புக்கு சாட்சி
UPDATED : செப் 14, 2025 10:09 AM
ADDED : செப் 14, 2025 02:07 AM

எண்ணங்களை குதுாகலப்படுத்தும் தன்மை, வண்ணத்துப்பூச்சிகளுக்கு உண்டு. கற்பனையிலும் கண்டிராத பல வண்ணங்களை கொண்ட வண்ணத்துப்பூச்சிகள், ரசிப்பதற்கு மட்டுமல்ல... பல்லுயிர் சூழலின் பாதுகாவலனாகவும் இருக்கிறது. தாவர, செடி, கொடிகளின் வளர்ச்சிக்கு மகரந்த சேர்க்கை என்பது மிக முக்கியம்; அதை செய்து கொடுப்பதில், வண்ணத்துப்பூச்சிகளின் பங்களிப்பு அதிகம்.
ஆனால், சமீப ஆண்டுகளாக வண்ணத்துப்பூச்சிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. வண்ணத்துப்பூச்சிகளின் வாழ்வியல் சூழல் பாதிக்கப்பட்டிருப்பது தான், இதற்கு காரணம். வண்ணத்துப்பூச்சிகளின் முக்கியத்துவத்தை பள்ளி மாணவ, மாணவியர் மத்தியில் விதைத்து, அவற்றின் இனப்பெருக்கத்தை ஊக்குவிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் ரோட்டரி அமைப்பை சேர்ந்த இயற்கை ஆர்வலர் சுசித்ரா.
பட்டாம்பூச்சிகளுடனான தனது பயணம் குறித்து அவர் கூறியதாவது:வண்ணத்துப்பூச்சிகளின் எண்ணிக்கை சமீப ஆண்டுகளாக குறைந்து வருகிறது. மண்ணுக்கேற்ற தாவரங்களான தும்பை, நொச்சி உள்ளிட்ட தாவர, செடியினங்கள் இல்லாமல் போனதே இதற்கு முக்கிய காரணம். மேலும், வளர்க்கப்படும் செடி, கொடிகளில் ரசாயன உரங்களின் பயன்பாடும், வண்ணத்துப்பூச்சிகளின் வாழ்விடத்தை கபளீகரம் செய்திருக்கிறது.
உணவுச்சங்கிலி அறுபடாமல் இருக்க வண்ணத்துப்பூச்சிகள் அவசியம் என்பதை, பள்ளி மாணவ, மாணவியர் மத்தியில் உணர்த்தும் வகையில், வண்ணத்துப்பூச்சிகளுக்கான வாழ்வியல் சூழலை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்கில் பள்ளிகள் தோறும் சென்று, வாய்ப்புள்ள இடங்களில் செடிகளை வளர்க்க மாணவ, மாணவியரை ஊக்குவித்து வருகிறோம். பூ, காய், கனி தரும் செடிகளின் பலன் முடிந்த பின், அவற்றை வெட்டி எறிந்து விடும் பழக்கம் பரலவாக உள்ளது. அந்த செடிகள், வண்ணத்துப்பூச்சி போன்ற பிற பூச்சியினங்கன் வாழ்வியல் சூழலுக்கு உகந்ததாக இருக்கும்.
தேனீக்கள் இல்லாமல் போனால், உலகம் அழிந்துவிடும் என்பார்கள்; அதுபோல வண்ணத்துப்பூச்சிகளும் உயிர் சூழல் மண்டலம் உயிர்ப்புடன் இருக்க அவசியமானது. வண்ணத்துப்பூச்சிகள் இடம் பெயர்வதை வழக்கமாக கொண்டுள்ளன. அதற்கேற்ப தாவர இனங்களை வளர்ப்பதை மாணவ, மாணவியருக்கு கற்றுக் கொடுக்கிறேன்.