ADDED : ஏப் 26, 2025 12:11 AM
அ நிறம் | அளவு
வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சூரியகாந்தி விதை ஏலம் நேற்று நடந்தது. இதில் பஞ்சப்பட்டி, வடுகபட்டி, பாறையூர், லந்தகோட்டை, அப்பிபாளையம் கிராமங்களை
சேர்ந்த விவசாயிகள், மொத்தம், 35 டன் சூரியகாந்தி விதையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், அதிகபட்சமாக ஒரு கிலோ 62.77 ரூபாய், குறைந்தபட்சம், 55.39 ரூபாய் ஏலம் போனது. மொத்தம், 21.56 லட்சம் ரூபாய்க்கு ஏல வர்த்தகம் நடந்தது.
