ADDED : அக் 14, 2024 11:56 PM

அப்துல் கலாம் நாட்டின் உயர் பதவியான ஜனாதிபதி பதவி வகித்தவர். அவரது அறிவாற்றலால் ஒரு விஞ்ஞானியாக அறிவியல் துறையில் சாதனை படைத்தவர். அவ்வகையில் அவர் அறிவியல் துறையை வழி நடத்தினார்.
தனது ஆற்றலால் நாட்டின் முதல் குடிமகனாக இந்த நாட்டையே வழி நடத்தினார். தனது எளிமையான வாழ்க்கை முறை மற்றும் மக்களிடம் அணுகும் முறையால் மக்களின் மனங்களை அவர் ஆட்சி செய்தார். அவரது அறிவாற்றல் தான் எனக்கு அறிவியல் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தியது, வழி நடத்தியது என்று கூறினால் அது மிகையல்ல.
வெற்றி, தோல்விகளை கையாளும் கலையை அவரிடமிருந்து, அவரது எழுத்துக்களிலிருந்தும் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அவர் வாழ்க்கையிலிருந்து எளிமையை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அவர் கனவு கண்ட வல்லரசை இன்றைய இளைஞர்கள் அவரது வழியில் நின்று ஏற்படுத்த வேண்டும்.
- சோனிகா, பல் மருத்துவர் திருப்பூர்.
