ADDED : ஜூலை 18, 2025 09:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலை ரயில்வே ஸ்டேஷனில் கண்காணிப்பு கேமரா அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை - திண்டுக்கல் வழித்தடத்தில் உடுமலை ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. உடுமலை வழியாக, 4 ரயில்கள் சென்று வருகின்றன. தினமும் நுாற்றுக்கணக்கான மக்கள் ரயிலில் செல்கின்றனர்.
காலை, மாலை நேரங்களில் ஸ்டேஷனில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும்.
இதனால், பயணிகளின் பாதுகாப்பு கருதியும், சமூக விரோத செயல்களை தடுக்கும் வகையிலும், உடுமலை ரயில்வே ஸ்டேஷனில் கண்காணிப்பு கேமரா அமைக்க, ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.