/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இனிக்கும் கரும்பு; சுவைத்தால் தெம்பு!
/
இனிக்கும் கரும்பு; சுவைத்தால் தெம்பு!
ADDED : ஜன 15, 2024 12:48 AM

திருப்பூர்:'கரும்பு தின்னக்கூலியா?' என்பது முதுமொழி. காரணம், கரும்பில் நிறைந்து கிடக்கும் இயற்கையான ஊட்டச்சத்துக்கள் தான்.
கரும்பில் அதிகளவில் நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், ஸிங்க், தையாமின், ரிபோபிளவின், புரதம் உள்ளிட்ட பலவகை சத்துகள் இருப்பதாக கூறப்படுகிறது.
சோர்வில் உடல் தளரும் போது, ஒரு துண்டு கரும்பை மென்று தின்று, சக்கையில் வடியும் இனிப்பூட்டும் ரசத்தை குடிப்பதால், உடல் தெம்பு பெறும் என்பது, நிரூபிக்கப்பட்ட உண்மை.கரும்பில் கால்சியம், மெக்னீசியம் சத்துக்கள் நிறைவாக இருப்பதால், பற்கள் மற்றும் எலும்புகள் வலுப்பெறும். கரும்பை மெல்லும் போது, அது, மன உளைச்சலை ஆற்றுப்படுத்தும், அதாவது, 'ஸ்ட்ரெஸ் பஸ்டர்' போன்று செயல்படுகிறது எனவும், கரும்பின் 'பயோ டேட்டா' உணர்த்துகிறது.
ஆக, இயற்கையின் வடிவமைப்பில் கரும்பில் நிரம்பி கிடக்கும் சத்துக்கள் ஏராளம். ஆண்டு முழுக்க கிடைக்கும் கரும்பை, தினசரி உண்ட மக்களும் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால், இன்று பொங்கல் பண்டிகையின் போது மட்டும் கரும்பு ஞாபகம் வருகிறது. ரோட்டோரம் கரும்புக்கடை விரித்துள்ள வியாபாரிகளும், பொங்கல் சீசன் போது தான் பிஸியாகின்றனர்.
பொங்கல் கொண்டாடப்படும், நாட்களில் மட்டுமே கரும்பு நுகர்வு அதிகரிக்கிறது. சிறுவர், சிறுமியர் ஆசையாய் கரும்பு சுவைக்கின்றனர். மற்ற நாட்களில் கரும்பின் அருமை மறந்து போகிறது.