ADDED : ஆக 06, 2024 06:31 AM
இன்று இனிதாக
ஆன்மிகம்
பொங்கல் விழா
ஸ்ரீ அத்தனுார் அம்மன் கோவில், சுதந்திரநல்லுார், அவிநாசி. இளநீர் காவடி பூஜை - இரவு 7:00 மணி.
பொது
சிறப்பு முகாம்
'மக்களுடன் முதல்வர்' திட்ட சிறப்பு முகாம், செங்கோடம்பாளையம், ஆரத்தொழுவு, பெருமாள்பாளையம், புங்கந்துறை, சங்கராண்டாம்பாளையம், சிறுகிணர் ஊராட்சி பகுதிகளுக்கு, பழநி பாதயாத்திரை மண்டபம், ஊதியூர், குண்டடம். காலை 10:00 மணி.
மரக்கன்று நடும் விழா
உலக பனை நடும் நாள் விழாவை முன்னிட்டு, மரக்கன்று நடும் விழா, கொங்கு வேளாளர் திருமண மண்டபம், கோவை ரோடு, பல்லடம். ஏற்பாடு: பல்லடம், வனம் இந்தியா பவுண்டேஷன். காலை 9:00 மணி.
கருத்தரங்கம்
' ஜி.எஸ்.டி.,யில் சமீபத்திய மாற்றங்கள் ' எனும் தலைப்பில் கருத்தரங்கம், எம்.கே.எம்., ரீச் ஓட்டல், ராயபுரம், திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர், வரிபயிற்சியாளர் கூட்டமைப்பு. காலை 11:30 முதல் மதியம், 1:00 மணி வரை.
வழிகாட்டுதல் நிகழ்ச்சி
' தெளிந்த நல்லறிவு வேண்டும்' எனும் தலைப்பில், பெண்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி, வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அவிநாசி ரோடு, திருப்பூர். பங்கேற்பு: ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன். காலை 10:00 முதல் மதியம், 12:00 மணி வரை.
ஆலோசனை முகாம்
கல்வி கடன் வழங்குவது குறித்த ஆலோசனை முகாம், கலெக்டர் அலுவலகம், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட முன்னோடி வங்கி (கனரா வங்கி). மதியம், 2:00 மணி.
ஆர்ப்பாட்டம்
மருத்துவ காப்பீடு திட்ட குளறுபடிகளை களைய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், கலெக்டர் அலுவலகம் முன், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம். காலை, 10:00 மணி.
* தாசில்தார் அலுவலகம் முன், தாராபுரம். காலை 10:00 மணி.
மருத்துவ முகாம்
'கலிக்கம்' பாரம்பரிய சித்த மருத்துவ முகாம், கந்தவேல் மஹால், அன்னமயி ஓட்டல், மங்கலம் ரோடு, அவிநாசி. மாலை, 4:00 முதல், 6:00 மணி வரை.
யோகாசான பயிற்சி துவக்கம்
பி.எம்.ஆர்., சுப்புலட்சுமி திருமண மண்டபம், பல்லடம். ஏற்பாடு: வாழும் கலைக் குடும்பத்தினர், பல்லடம். மாலை, 6:00 முதல் இரவு, 8:45 மணி வரை.
தியான பயிற்சி
யோகா, தியானப் பயிற்சி, ஆதிவிநாயகர் கோவில், மாதப்பூர், பல்லடம். ஏற்பாடு: ஹார்ட்புல்னெஸ் நிறுவனம். மாலை 5:30 முதல், இரவு, 8:00 மணி வரை.