ADDED : அக் 13, 2024 05:42 AM
n ஆன்மிகம் n
பொங்கல் திருவிழா
ஸ்ரீ வேம்புநாத கணபதி, ஸ்ரீ தேவி பூதேவி சமேத, ஸ்ரீ வேம்புநாத பெருமாள் கோவில், ஸ்ரீ வீரமாத்தியம்மன் கோவில், ஈட்டிவீரம்பாளையம், பெருமாநல்லுார். சுவாமி அலங்காரம் - காலை 6:00 மணி. பொங்கல், தீபாராதனை - 7:00 மணி. உச்சிக்கால பூஜை, தாசர்கள் கவாளங்கள் எடுத்தல், பாரி வழிபடுதல் - மதியம் 12:00 மணி. இளப்பு கூடை நிகழ்ச்சி - மாலை 4:00 மணி.
பிரம்மோற்சவம்
விஜயதசமி பிரம்மோற்சவம் வைபவம், ஸ்ரீதேவி, பூதேவி சமேத, ஸ்ரீ அரங்கநாத பெருமாள் கோவில், அனுப்பர்பாளையம், அவிநாசி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ அரங்கநாத பெருமாள் கோவில் பரம்பரை அறக்கட்டளை. ஸ்ரீ அரங்கநாத பெருமாள் உற்சவ மூர்த்தி குதிரை வாகனத்தில் திருவீதி உலா - இரவு 8:00 மணி.
நவராத்திரி விழா
ஹார்வி குமாரசாமி மண்டபம், வாலிபாளையம் மெயின் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீஸ்ரீ 108 ஸ்ரீ துர்கா பூஜா சேவா சமித்தி. மஹா துர்கா தேவி விசர்ஜன பூஜை - காலை 6:00 மணி.
சிறப்பு அன்னதானம்
ஸ்ரீ யாத்ரி பவனா, ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் மற்றும் ஆஞ்சநேயர் கோவில், ஆலத்துார் ரோடு, மொண்டிபாளையம், சேவூர், அவிநாசி. காலை 9:00 முதல் இரவு, 8:00 மணி வரை.
n பொது n
முப்பெரும் விழா
விவசாய சங்க அலுவலகம் திறப்பு, விசைத்தறி உரிமையாளர் நலச்சங்கம் திறப்பு, கொடியேற்று விழா, தெக்கலுார், அவிநாசி. ஏற்பாடு: கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம். மாலை 3:00 மணி.
தொடர் களப்பணி
சங்கமாங்குளம் குளக்கரை, அவிநாசி. ஏற்பாடு: குளம் காக்கும் இயக்கம். காலை 7:00 முதல் 9:00 மணி வரை.
சிறப்புக் கூட்டம்
மாதாந்திர சிறப்புக் கூட்டம், பி.கே.ஆர்., இல்லம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம். மாலை 4:30 மணி.
இலவச பரிசோதனை முகாம்
இலவச கண், ரத்த அழுத்தம், சர்க்கரை பரிசோதனை முகாம், ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில், பூச்சக்காடு, மங்கலம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: சக் ஷம் அமைப்பு, தி ஐ பவுண்டேசன். காலை 9:00 முதல் மதியம் 100 மணி வரை.
n இலவச கண் சிகிச்சை முகாம், ஊராட்சி துவக்கப் பள்ளி, வே.கள்ளிபாளையம். ஏற்பாடு: கே.எஸ்.கே., பவுண்டேசன். காலை 8:00 முதல் மதியம், 1:00 மணி வரை.
அளவீடு முகாம்
இலவச செயற்கை அவயம் அளவீடு முகாம், ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில், பூச்சக்காடு, மங்கலம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: சக் ஷம் அமைப்பு. காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
கம்பத்தாட்ட நிகழ்ச்சி
சேற்று மாரியம்மன் கோவில், தெக்கலுார், அவிநாசி. ஏற்பாடு: காராளன் கம்பத்தாட்ட குழு, கொங்கு பண்பாட்டு மையம். முளைப்பாலிகை ஊர்வலம், வேல் பூஜை, சலங்கை பூஜை, கம்பத்தாட்டம் அரங்கேற்றம் மற்றும் பரிசளிப்பு விழா - மாலை 3:00 மணி.
சிறப்பு நிகழ்ச்சி
'சிரிப்போம்; சிந்திப்போம்' எனும் தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி, ஹார்வி குமாரசாமி மண்டபம், யுனிவர்சல் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் நகைச்சுவை அரங்கம் டிரஸ்ட். பங்கேற்பு: நகைச்சுவை பேச்சாளர் மோகன சுந்தரம். மாலை 5:30 மணி.
அரங்கேற்ற விழா
வள்ளிக்கும்மி அரங்கேற்ற விழா, மாகாளியம்மன் கோவில், வஞ்சி பாளையம், அவிநாசி. ஏற்பாடு: முருகம்பாளையம் மாகாளியம்மன் சேவா அறக்கட்டளை. திருவிளக்கேற்றுதல் - மாலை 5:15 மணி. வள்ளிக்கும்மியாட்டம் - மாலை 6:00 மணி.
n விளையாட்டு n
மாநில கேரம் போட்டி
மாநில ரேங்கிங் கேரம் இறுதிப் போட்டி, விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கூலிபாளையம் நால்ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட கேரம் சங்கம். காலை 9:00 முதல் இரவு 8:00 மணி வரை.