ஆன்மிகம்
சிறப்பு பாராயணம்
குலாலர் விநாயகர் கோவிலில் திருப்பள்ளியெழுச்சி, விஸ்வேஸ்வரர் கோவில், கன்னிகாபரமேஸ்வரி அம்மன் கோவில் மற்றும் வீரராகவப்பெருமாள் கோவிலில் திருப்பாவை வழிபாடு - காலை, 5:30 மணி. ஏற்பாடு: அருள்நெறி வார வழிபாட்டுத் திருக்கூட்டம், திருப்பூர்.
சொற்பொழிவு
ஸ்ரீ வியாஸராஜர் பஜனை மடம், வீர ஆஞ்சநேயர் கோவில், அவிநாசி. பங்கேற்பு: சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன். திருப்பாவை உபன்யாசம் - காலை, 7:00 முதல், 8:00 மணி வரை. வில்லி பாரதம் தொடர் சொற்பொழிவு - மாலை, 6:30 முதல், 8:30 மணி வரை.
அன்னதானம்
ஸ்ரீஐயப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். மகேஸ்வர பூஜை - காலை, 11:00 மணி, அன்னதானம் - 11:30 மணி.
பொது
மகாசபை கூட்டம்
கொங்கு வேளாளர் அறக்கட்டளை, 44வது மகாசபை கூட்டம், தீரன் சின்னமலை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி வளாகம், வஞ்சிபாளையம், அவிநாசி. காலை, 10:31 மணி.
கண்டன ஆர்ப்பாட்டம்
வணிகர்களை பாதுகாக்க சிறப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம், குன்னத்துார். ஏற்பாடு: தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப்பேரவை. காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை.
நகை கண்காட்சி
பாப்பீஸ் விஸ்டா ஓட்டல், அவிநாசி ரோடு, திருமுருகன்பூண்டி. காலை, 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை.
கல்யாண மாலை
காயத்ரி ஓட்டல் காங்கயம் ரோடு, திருப்பூர். காலை, 10:00 முதல் மதியம், 2:00 மணி வரை.
பொங்கல் இன்னிசை
பதா ஸ்டேடியம், பல்லடம் ரோடு, திருப்பூர். மாலை, 6:00 மணி. பங்கேற்பு: பின்னணி பாடகர் வேல்முருகன்.
மாநாட்டு நிகழ்ச்சி
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டு நிகழ்ச்சி, கலெக்டர் அலுவலகம் கூட்டரங்கம், திருப்பூர். காலை, 9:00 மணி.
செயற்கை கால் அளவீடு முகாம்
மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச செயற்கை கால் அளவீடு மற்றும் கண் சிகிச்சை முகாம், ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் மண்டபம், பூச்சக்காடு 2வது வீதி, மங்கலம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: சக் ஷம் அமைப்பு. காலை, 9:00 முதல் மதியம், 1:00 மணி வரை.
கண சிகிச்சை முகாம்
ஸ்ரீ சத்ய சாய் சேவா மையம், மில்லர் பஸ் ஸ்டாப், பி.என்., ரோடு, திருப்பூர். காலை, 8:00 முதல் மதியம், 1:00 மணி வரை.
யங் சயின்டிஸ்ட் சங்கமம்
பார்க்ஸ் கல்லுாரி, சின்னக்கரை, திருப்பூர். காலை, 9:00 முதல், 12:00 மணி வரை.
வாக்காளர் விழிப்புணர்வு
திருப்பூர் தெற்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட பகுதியில் சைக்கிள் பேரணி, மாநகராட்சி அலுவலகம், திருப்பூர். காலை, 6:00 மணி.
இலவச பரிசோதனை
மாபெரும் இலவச இருதய, பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளி, அல்லாளபுரம், கரைப்புதுார். காலை, 9:00 முதல் மதியம், 1:00 மணி வரை.
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
வேலம்பட்டி சுங்கசாவடி திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம், அவினாசிபாளையம். காலை, 10:00 மணி.
திறனாய்வு போட்டி
புத்தகத் திருவிழாவையொட்டி மாணவர், மாணவியருக்கான கலை இலக்கிய திறனாய்வு போட்டி, குமார் நகர், என்.ஆர்.கே., புரம், நெசவாளர் காலனி, வாவிபாளையம், பெருமாநல்லுார், மாஸ்கோ நகர், வேலம்பாளையம், ஜெய்வாபாய் பள்ளி, அவிநாசி, பல்லடம், பொங்கலுார் அரசு பள்ளிகள். ஏற்பாடு: பின்னல் புக் டிரஸ்ட். காலை, 9:00 மணி.
மருத்துவ முகாம்
விவேகானந்தா அறக்கட்டளை வளாகம், அன்பு இல்லம், திருமுருகன்பூண்டி. மாலை, 9:00 முதல் மதியம், 12:00 மணி வரை.
முப்பெரும் விழா
ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், யுனிவர்சல் தியேட்டர் ரோடு, திருப்பூர். மாலை, 3:00 மணி. ஏற்பாடு: ராயல் ஏஞ்சல் டுட்டோரியல் காலேஜ்.
வாசகர் சிந்தனை பேரவை
ஏ.வி.பி., லே அவுட் குடியிருப்போர் நலச்சங்கம் அலுவலகம், அவிநாசி ரோடு, காந்தி நகர். மாலை, 4:00 மணி.
பொங்கல் விழா
வனாலயம், திருச்சி ரோடு, பல்லடம். ஏற்பாடு: தாய் அறக்கட்டளை. காலை, 9:00 மணி. கருத்தரங்கம் - மாலை, 5:30 மணி. கம்பத்து ஆட்டம் - மாலை, 6:30 மணி.
உலக அமைதி வார விழா
மனவளக்கலை மன்ற அறக்கட்டளை, கச்சேரி வீதி, மாமரத்தோட்டம், அவிநாசி. நகைச்சுவை பட்டிமன்றம் - மாலை, 5:00 முதல் இரவு, 7:00 மணி வரை.
மனவளக்கலை மன்றம், பெரியார் காலனி, அவிநாசி ரோடு, திருப்பூர். மாலை, 6:00 முதல் இரவு, 8:00 மணி வரை. 'உன்னை அறிந்தால்' எனும் தலைப்பில் கருத்தரங்கம்.
யோகா மஹோத்சவம்
காமாட்சி அம்மன் திருமண மண்டபம், திருப்பூர் ரெயின் ரோடு, ஊத்துக்குளி. மாலை, 5:00 முதல், இரவு, 8:00 மணி வரை.
வி.எஸ்.எஸ்., திருமண மண்டபம், பொள்ளாச்சி ரோடு, கொடுவாய். மாலை, 5:30 முதல் இரவு, 8:00 மணி வரை. ஏற்பாடு: ஹார்ட்புல்னெஸ் நிறுவனம்.
பொருட்காட்சி
லண்டன் பிரிட்ஜ் பொருட்காட்சி, பத்மினி கார்டன், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: விஜய் டிரேடர்ஸ். மாலை, 4:00 முதல் இரவு, 10:00 மணி வரை.
விளையாட்டு
மாவட்ட சதுரங்க போட்டி
தி குவெஸ்ட் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி, அவிநாசிலிங்கம்பாளையம். காலை, 9:00 மணி.